வோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை

மத்திய தொலை தொடர்புத்துறை (DOT) வோடபோன் ஐடியா இணைப்பிற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்துள்ளதால் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா உருவெடுத்துள்ளது.

மத்திய தொலை தொடர்புத் துறைக்கு வோடபோன் இந்தியா நிறுவனம்  ஒரு முறை ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ரூ. 3,342 கோடியை வங்கி வைப்புநிதியா செலுத்தவும், ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ. 3926 கோடியை டெலிகாம் துறைக்கு செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ள வோடபோன் ஐடியா இணைப்பின் காரணமாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 43 கோடியாக உயர்ந்துள்ளதால் நாட்டின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா உருவெடுத்துள்ளது.