reliance-jio-celebration-pack

ஐபிஎல் 2019 போட்டிகளை முன்னிட்டு மீண்டும் ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக் ரீசார்ஜ் பிளான் ரூ.251 கட்டணத்தில் மொத்தமாக 102 ஜிபி டேட்டா வழங்கும் வகையில் கடந்த ஆண்டை போல இந்த பிளானை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

இந்த ரீசார்ஜ் திட்டத்தில் அழைப்பு நன்மை, எஸ்எம்எஸ், உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுவதில்லை. இந்த பிளான் பிரத்தியேகமாக டேட்டாவை மையமாக கொண்டதாக விளங்குகின்றது.

ஜியோ கிரிக்கெட் டேட்டா பேக்

51 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த ரீசார்ஜ் பிளானில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2 ஜிபி உயர் வேக டேட்டா வழங்கப்படுவதுடன் அதன்பிறகு டேட்டா வேகம்  64Kbps ஆக குறைக்கப்படுகின்றது. பொதுவாக இந்த டேட்டா பிளானில் கிரிக்கெட் தொடர்பான வீடியோ, படங்கள் உட்பட அனைத்து தரவுகளையும் பன்படுத்தலாம்.

குறிப்பாக இந்த ரீசார்ஜ் திட்டத்தில் எவ்விதமான காலிங் நன்மை, எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படுவதில்லை. ஆனால் தேசிய ரோமிங் நேரங்களில் டேட்டா இலவமாக பெறலாம். மை ஜியோ செயலி மூலம் உள்நுழைந்து  கிரிக்கெட் ரசிகர்கள் இந்த டேட்டா திட்டத்தை பெற்று மகிழலாம்.

ஜியோ நிறுவனம், சமீபத்தில் செய்திகள், நாளிதழ்கள் மற்றும் லைவ் டிவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒன்றாக இணைந்து ஜியோநியூஸ் சேவையை தொடங்கியுள்ளது.