இந்திய தொலைத்தொடர்பு துறையில் 4ஜி சேவையை தொடர்ந்து, வரவுள்ள 5ஜி சேவையில் பார்தி ஏர்டெல் நிறுவனம் ஸ்விடன் நாட்டின் டெலிகாம் சாதனங்களை தயாரிக்கும் எரிக்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

பார்தி ஏர்டெல் 5ஜி

சர்வதேச அளவில் 5ஜி நுட்பம் தொடர்பான நடைமுறைகள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் பல்வேறு நாடுகளில் வர்த்தகரீதியான பயன்பாட்டிற்கு வரத் தொடங்க உள்ள நிலையில், ஏர்டெல் தற்போது நாடு முழுவதும் 4ஜி வோல்ட்இ சேவையை விரிவுப்படுத்தி வருகின்றது.

ஏர்டெல் மற்றும் எரிக்சன் ஒப்பந்தம் தொடர்பாக எரிக்சன் நிறுவன துணை தலைவர் தகவல் மிர்டிலோ கூறியதாவது ”  எரிக்சன் நிறுவனம் முன்பே ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து வளமான 4ஜி சேவையை செயற்படுத்தி உள்ள நிலையில் தற்போது மீண்டும் இந்த கூட்டணியில் 5ஜி சேவை வழங்குவதற்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கியில் கையெழுத்தாகியுள்ள ஒப்பந்தத்தில் 5ஜி சேவை மிக வேகமாக விரைவாகுவும் வழங்கும் என குறிப்பிடப்படுள்ளது.

புதிய 5ஜி தொழில்நுட்பம் பொறுத்தவரை 2026-ம் ஆண்டு வாக்கில் மொத்த இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ரூ.1,77,489 கோடி வருவாயை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக என எரிக்சன் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.