கதறும் அம்பானி.., ஜியோவில் இருந்து வெளியேறும் வாடிக்கையாளர்கள்..!

விவசாய போராட்ட எதிரொலி காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திலிருந்து பெருமளவிலான வாடிக்கையாளர்கள் போர்ட் கோருவதனால், இதற்கு காரணம் ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் எங்கள் மீது வீண் பழி சுமத்துவதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஜியோ கடிதம் எழுதியுள்ளது.

ஜியோ நிறுவனம் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எழுதியுள்ள டிசம்பர் 11 ஆம் தேதி எழுதி கடிதத்தில், ஏர்டெல் மற்றும் வி என இரு நிறுவனங்களும், எங்களுக்கு (ரிலையன்ஸ் ஜியோ) எதிராக விவசாய போராட்டத்திற்கு எதிரான சூழ்நிலையில் போலியான தகவல்களை பரப்பி களங்கம் விளைவித்து வாடிக்கையாளர்களை போர்ட் செய்ய திணிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதற்கு ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் 25 ஆண்டுகாலமாக தொலைத் தொடர்பு சந்தையில் உள்ளோம் என குறிப்பிட்டுள்ள இந்நிறுவன அறிக்கையில், ஏர்டெல்லுக்கு எதிராக ரிலையன்ஸ் ஜியோ மூலம் TRAI-க்கு அளிக்கப்பட்ட  புகார் குறித்து ஊடகங்கள் மூலம் எங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புகார் பஞ்சாப் / ஹரியானா எல்எஸ்ஏ (உரிம சேவை சேவை பகுதி) சந்தை நடவடிக்கைகளுடன் தொடர்புடையது. அவை வாடிக்கையாளர்களை ஏர்டெல்லுக்கு மறைமுகமாக ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. நாங்கள் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை உறுதியாக மறுக்க விரும்புகிறேன், ”என்று பாரதி ஏர்டெல் தொலைத்தொடர்பு குறிப்பிட்டுள்ளது.

ஜியோவின் குற்றச்சாட்டுகளையும் வி (வோடபோன் ஐடியா) மறுத்துள்ளது.

“நெறிமுறைகளுடன் வியாபாரம் செய்வதை வி நம்புகிறது, எங்கள் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் எங்களுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பெருமளவு வாடிக்கையாளர்கள் போர்ட் கோரி விண்ணப்பித்து வருகின்றனர். இப்போது ஜியோ மீதான வெறுப்பு நாடு முழுவதும் பரவ துவங்கியுள்ளதால் மொபைல் நெம்பர் போர்ட் கோரும் விண்ணப்பம் அதிகரித்துள்ளதால், ஜியோ அதிர்ச்சி அடைந்துள்ளது.

“ஏர்டெல் மற்றும் வி ஆகியவை அதன் ஊழியர்கள், முகவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் இந்த தீய மற்றும் பிளவுபடுத்தும் பிரச்சாரத்தைத் தொடரமுடியாது என்று நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். பொதுமக்கள் விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக தாங்களே முன் வந்து ஜியோ நெட்வொர்க்கிலிருந்து வெளியேறக்கூடும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) செயலாளர் எஸ்.கே. குப்தா தெரிவித்துள்ளார்.

MNP செய்வது எப்படி ?

ஜியோ மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் இருந்து மொபைல் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்துக்கு மாற MNP என்ற வசதி வழங்கப்படுகின்றது.

படி 1 – PORT<Space> mobile number என டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு அனுப்பினால் உங்களுக்கு போர்ட்டிற்கு அனுமதி வழங்கும் UPC எண் கிடைக்கப் பெறும்.

படி 2 – கிடைத்த UPC எண் கொண்டு அருகாமையில் உள்ள விருப்பமான டெலிகாம் ரீடெயிலரை தொடர்பு கொள்ளவும்.

படி 3- போர்ட் விண்ணப்பம் கோரிய 5 முதல் 7 நாட்களுக்குள் உங்களுடைய புதிய நெட்வொர்க் சேவை கிடைக்க துவங்கும். ஜம்மூ மற்றும் காஷ்மீர், அசாம், வட கிழக்கு பகுதிகளில் 15 நாட்கள் தேவைப்படும்.

குறிப்பு UPC எண் வேலிடிட்டி நான்கு நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும். ஆதார் கார்டினை பயன்படுத்தினால் விரைவாக பணிகள் நிறைவடைகின்றது.