அதிர்ச்சி..! இனி இலவச இன்கம்மிங் கால் ரத்தாகின்றது

ஜியோ நிறுவன வருகைக்குப் பின்னர் முற்றிலும் மாறிய இந்திய தொலைத் தொடர்பு துறையில் அடுத்த மாற்றத்தை ஏற்படுத்த வோடபோன், ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இலவச இன்கம்மிங் கால் சேவையை நிறுத்தும் முயற்சியில் டெலிகாம் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளது.

டெலிகாம் நிறுவனங்களில் ஒரு பயனர் சராசரி வருவாய் குறைய தொடங்கியுள்ள நிலையில், இதனை ஈடுகட்டும் நோக்கில் தற்போது நடைமுறையில் உள்ள ரூ.10 உட்பட பல்வேறு டாக்டைம் வசதிகளை முற்றிலும் நீக்கிவிட்டு ரூ.35 தொடங்கி மாதந்திர ரீசார்ஜ் திட்டங்களை வோடபோன் , ஐடியா செல்லுலார் மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. எனவே இனி மாதந்தோறும் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள மட்டுமல்ல இன்கம்மிங் பெறவும் முடியும் நிலையை உருவாக்க இந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

ஜியோ நிறுவனத்தின் பிளான்கள் டேட்டா மட்டுமே கட்டணாகவும், உள்வரும் அழைப்பு மற்றும் வெளியே செல்லும் அழைப்புகள் முற்றிலும் இலவசம் என்றே வழங்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலான பயனர்கள் ஜியோ இணைப்பினை கூடுதலாக கொண்டுள்ளதால், ஏர்டெல் , வோடபோன் , ஐடியா நிறுவனங்களை கொண்டுள்ள பயனர்கள் ரீசார்ஜ் செய்வதனை தவிர்த்து இன்கம்மிங் அழைப்புகளுக்கு மட்டும் சிம் கார்டினை பயன்படுத்துவதனால், இதுபோன்ற மாற்றத்தை மேற்க்கொள்ள இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது.

உங்கள் இன்கம்மிங் கால் சேவை ஜனவரி 1, 2019 முதல் துண்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிகார்வபூர்வமான செய்தி விரைவில் வெளியாகும் இணைந்திருங்கள்.