ஏர்டெல்

கொரோனா வைரஸ் பரவலால் 21 நாட்கள் நாடு முழுவதும் லாக் டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே மொபைல் ரீசார்ஜ் செய்ய வேண்டி சூழல் ஏற்பட்டுள்ளதால், அவ்வாறு செய்ய இயலாதவர்களுக்கு ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளன.

ஜியோ நிறுவனம், தனது ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 17 ஆம் தேதி வரை, 100 நிமிட இலவச அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஏர்டெல் நிறுவனம், ரீசார்ஜ் செய்ய இயலாதவர்களுக்கு இன்கம்மிங் அழைப்புகள் வேலிடிட்டி நீக்கப்படாத எனவும், ரூ.10 டாக் டைம் வழ்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம், இன்கம்மிங் அழைப்புகள் வேலிடிட்டி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நீட்டிக்கவும், ரூ.10 டாக் டைம் வழ்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டிராய் டெலிகாம் நிறுவனங்களுக்குள் அனுப்பியுள்ள கடித்தத்தில், நீட்டிக்கப்பட்ட வாரண்டி வழங்கப்பட வேண்டும். இலவச அழைப்புகள் லாக் டவுன் காலம் வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.