இந்தியாவில் கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர் விற்பனைக்கு வந்தது

இந்திய டெக்னாலாஜி சந்தையில் புதிய வரவாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பிளிப்கார்ட் தளத்தின் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் ஹோம், ஹோம் மினி ஸ்பீக்கர்

அலெக்ஸா வாய்ஸ் ஆதரவை பெற்ற அமேசான் ஈகோ, ஈகோ டாட், மற்றும் ஈகோ டாட் பிளஸ் ஆகிய கருவிகள் இந்திய சந்தையில் கிடைத்து வரும் நிலையில் இவற்றுக்கு போட்டியாக கூகுள் அசிஸ்டென்ஸ் கொண்டு செயல்படும் கூகுள் ஹோம் மற்றும் கூகுள் ஹோம் மினி ஆகிய இரு ஸ்பீக்கர்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஃபிளிப்கார்ட் ஆப் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ள இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் ஸ்மார்ட் இல்லங்கள் எனப்படும் ஹோம் ஆட்டோமேஷன் (Home Automation) எனப்படும் தானியங்கி வசதிகளை கட்டுப்படுத்த, பாடல்கள், வீடியோ ஒளிபரப்ப மற்றும் விடைகளை தேட என பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக இந்த ஸ்பீக்கர்கள் செயல்படும் தன்மையை பெற்றதாக அமைந்திருக்கின்றது.

பிளிப்கார்ட்டை தவிர ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மற்றும் மை ஜியோ ஸ்டோர் ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆரம்பகட்ட சலுகையாக ஜியோ -ஃபை டாங்கில் கருவியை இலவசமாக வழங்குவதுடன் கூடுதலாக 100ஜிபி டேட்டாவை ஜியோ வழங்குகின்றது.

#MakeGoogleDoIt  என்ற ஹேஷ்டேக்கினை வழங்கி பிரபலப்படுத்தி வருப் கூகுள் நிறுவனத்தின் இந்த ஸ்பீக்கர்களை பெற ஃபிளிப்கார்ட் ஆப் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்யப்படுகின்றது.

கூகுள் ஹோம் ரூ.9,999 க்கும் கூகுள் ஹோம் மினி ரூ.4,499 க்கும் பிளிப்கார்ட் மூலம் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றது.