vodafone idea

கூகுள் தலைமையகம் ஆல்ஃபாபெட் நிறுவனம், வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோ நிறுவனத்தில் ஃபேஸ்புக் முதலீடு செய்ததை தொடர்ந்து வோடபோன் ஐடியா மீது கூகுள் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ நிறுவனத்தின் 9.99 சதவீத பங்குகளை ரூ. 43,574 ($5.7 பில்லியன்) மதிப்பில் முதலீட்டை கடந்த மாதம் மேற்கொண்டதை தொடர்ந்து ஆல்ஃபாபெட் நிறுவனம் இந்திய டெலிகாம் துறையில் முன்னனியாக உள்ள வோடபோன் பிஎல்சி மற்றும் ஆதித்தியா பிர்லா குழுமத்தின் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5 % பங்குகளில் முதலீடு செய்ய முதற்கட்ட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஃபைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகை தொடர்பான சிக்கலில் உள்ள நிலையில் கூகுள் முதலீடு செய்யும் பட்சத்தில் வோடபோனின் செயல்திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

update :-

வோடபோன் ஐடியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூகுள் முதலீடு தொடர்பான செய்திக்கு அவ்வாறு “எந்த திட்டமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.