ரயில் நிலைய இலவச வை-ஃபை சேவைகளில் ஆபத்து ?

உலகை இணைய தாக்குதலால் அச்சுறுத்திய வானாக்ரை ரான்சம்வேர் தாக்குதலில் இந்தியாவில் கூகுள் மற்றும் ரயில்டெல் இலவச வை-ஃபை சேவையே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இ-ஸ்கேன் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இலவச வை-ஃபை

இந்தியளவில் ரேன்சம்வேர் தாக்குதலில் கூகுள் மற்றும் ரெயில்டெல் இணைந்து வழங்குகின்ற இலவச வைபை சார்ந்த சேவைகளிலே அதிகமாக தாக்குதல் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இ-ஸ்கேன் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிகம் வானாக்ரை தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட இணைய சேவை வழங்குநராக ( ISP) ரெயில்டெல் உள்ளதாக தெரிவிக்கின்றது.

மொத்த இந்திய ரான்சம்வேர் தாக்குதலில் இணைய சேவை வழங்குநர்களின் அதிகம் பாதிப்படைந்த நிறுவனமாக 32.14 சதவிகித பங்களிப்புடன் ரெயில்டெல் முதலிடத்திலும், ஏர்டெல் 12.83 சதவிகித பாதிப்புடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் டாடா நிறுவனம் உள்ளது. மற்ற நிறுவனங்களின் பங்களிப்பை படத்தில் காணலாம்.

அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்தியபிரதேசம் முதலிடத்திலும், மஹாராஷ்டிரா 2வது இடத்திலும் டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளது. இங்கே குறிப்பிடதக்கதாகும். மற்ற மாநிங்களின் தாக்குதல் நிலையை படத்தில் காணலாம்.

எனவே, பொது வை-ஃபை சேவை என வழங்கப்படும் இலவச வை-ஃபை சேவை பெறுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக கையாள வேண்டும் என இ-ஸ்கேன் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாகவே, இலவச வைஃபை சேவை பெறுபவர்கள் கவனமாக இருப்பது மிக அவசியமாகும்.

Recommended For You