பிஎஸ்என்எல், ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் தங்களுடய மொபைல் எண்ணுடன் மார்ச் 31, 2018 க்குள் ஆதார் எண்ணை இணைக்க இறுதிநாளாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைக்க
மொபைல் போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அருகாமையில் உள்ள ரீடெயிலர் அல்லது டெலிகாம் நிறுவன அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்த நிலைக்கு பதிலாக புதிய ஐ.வி.ஆர்.எஸ் (Interactive Voice Response services – IVRS) எனப்படும் அழைப்பு வாயிலாக இணைக்கும் முறையை வோடஃபோன், ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் ஐடியா ஆகிய நான்கு நிறுவனங்களும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைப்பது எப்படி ?
1 . உங்கள் மொபைலில் இருந்து 14546 என்ற எண்ணுக்கு அழையுங்கள்.
2. அழைத்த பின்னர் இந்திய நாட்டவரா அல்லது என்.ஆர்.ஐ அல்லது வெளிநாட்டவரா என்பதனை உறுதி செய்ய இந்திய குடிமகன் என்றால் எண் 1 அழுத்தவும்.
3. ஆதார் எண்ணை இணைக்க கோரிக்கை விடுக்க மீண்டும் எண் 1 அழுத்தவும்.
4. 12 இலக்க ஆதார் எண்ணை பதிவு செய்த பின்னர் அதனை உறுதிபடுத்தி பின்னர் உங்கள் மொபைல் எண் உறுதி செய்யப்படும்.
5. பிறகு,உங்கள் பெயிலில் உள்ள மற்ற மொபைல் எண்கள், அதாவது நீங்கள் வோடபோன் எண் ஒன்றுக்கு மேற்பட்ட எண் வைத்திருந்தால் எத்தனை எண்கள் என்பதனை குறிப்பிட்டலாம்.
6. உங்கள் ஆதார் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைலுக்கு வருகின்ற OTP என்ற 6 இலக்க எண்ணை பதிவு செய்தால் ஆதார் எண் சரிபார்க்கப்படும்.
மேலே வழங்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றிய பின்னர் அடுத்த 48 மணி நேரங்களில் ஆதார் எண் மொபைல் போன் எண்ணுடன் இணைக்கப்படதை உறுதி செய்யும் எஸ்.எம்.எஸ் வந்து சேரும் என உங்களுக்கு மேசேஞ் கிடைக்கப்பெறும்.
ஆதார் எண் இணைப்பதற்கான இறுதி தீர்ப்பு வரும் வரை மொபைல் எண் , வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இணைப்பதற்கான இறுதிநாள் குறித்து எவ்விதமான தகவலும் வெளியாகவில்லை.
THANK YOU FOR USEFUL ARTICLE.
good
This is not working properly
எந்த நெட்வொர்க் ?