உலகளவில் 150 நாடுகளில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட விண்டோஸ் பயனாளர்களை தாக்கியுள்ள வானா க்ரை சைபர் தாக்குதலில் இருந்து தப்பிக்க என்ன வழி என்பதனை இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு குழு வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது.
வானா க்ரை
வானா க்ரை தாக்குதலில் உள்ளாகிய பெரும்பாலான கணினிகள் விண்டோஸ் எக்ஸ்பி தளத்தை தாக்கி வருகின்றது. எனவே உங்களுடைய கணினியை மிக கவனமாக கையாள வேண்டிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கைவிட்ட விண்டோஸ் XP பதிப்புகளுக்கும் அப்டேட் வெளியிட்டுள்ளது.
இணைப்பு முகவரி ;- https://blogs.technet.microsoft.com/msrc/2017/05/12/customer-guidance-for-wannacrypt-attacks/
உங்கள் கணினியில் தேவையற்ற தளங்களை பார்ப்பதனை தவிருங்கள்..
இது குறித்து சிஇஆர்டி வெளியிட்டுள்ள வீடியோ காணலாம்