ஹூவாய் 5ஜி

அடுத்த தலைமுறை டெலிகாம் சேவையாக விளங்க உள்ள 5ஜி சேவையை , இந்தியாவில் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹூவாய், எங்களால் 20 நாட்களில் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வழங்க இயலும் என இந்நிறுவன இந்திய தலைவர் ஜெய் சென் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வாவே நிறுவனம் , சுமார் 2 பில்லியன் டாலர் முதலீட்டை இந்திய சந்தையில் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவில் இந்நிறுவன தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு தடை விதிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் , ஐரோப்பாவிலும் தடை செய்ய மேற்கொண்ட அமெரிக்கா முயற்சி பயனளிக்கவில்லை.

ஹூவாய் 5ஜி சேவை

சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹூவாய் நிறுவனம், மிகவும் சவாலான விலையில் தொலைத்தொடர்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி வகிக்கின்றது. போட்டியாளர்களான நோக்கியா மற்றும் எரிக்கசன் நிறுவனத்தின் 5ஜி உபகரணங்களை விட விலை குறைந்ததாகவும், கூடுதல் அம்சங்களை பெற்றதாகவும் உள்ளது.

ஹூவாய் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி ஜெய் சென் கூறுகையில், நாங்கள் இந்திய சந்தையில் 5ஜி சேவையை வழங்குவதற்கான முயற்சியில் சில டெலிகாம் நிறுவனங்களுடன் இணைந்துள்ளோம். எனவே, இதன் மூலம் பாதுகாப்பான மற்றும் வேகமான அனுபவத்தை எங்களால் வழங்க இயலும் என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் ஹூவாய் நிறுவனம், 5ஜி சேவையை வழங்குவதற்கு சுமார் 30க்கு அதிகமான டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க – புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் செய்திகள் மற்றும் டெலிகாம் செய்திகள் படிக்கலாம்.