அமெரிக்கா அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஹூவாவே

ஹூவாவே நிறுவனம், 5ஜி செல்லிடபேசி தொலைத் தொடர்பு தடையை அமெரிக்கா அரசு விதித்ததை தொடர்ந்து, அதற்கு எதிராக சீனாவின் ஹூவாவே நிறுவனம் வழக்கை டெக்சாஸ் மாகாணத்தில் தொடங்கியுள்ளது.

அமெரிக்கா அரசு சீனாவின் ஹூவாவே மற்றும் ZTE நிறுவனங்களின் அடுத்த தலைமுறை அதாவது 5ஜி தொடர்பான கருவிகள் மூலம் வேவு பார்க்கவோ அல்லது இடைமறித்து கேட்கவோ வாய்ப்புள்ளதாக கூறிய அமெரிக்கா தடை விதித்தது. இதுபோன்ற எந்த தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுவதில்லை என ஹூவாவே நிறுவனம் போராடி வருகின்றது.

அமெரிக்காவை எதிர்க்கும் சீனாவின் ஹூவாவே

உலக தொலைத்தொடர்பு சார்ந்த கருவிகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதில் உலகிலேயே மிகவும் நவீனத்துவமான நடைமுறையும், அதிநவீன நுட்பத்தையும் ஹூவாவே நிறுவனம் வழங்கி வருகின்றது. எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் போன்ற நிறுவனங்களை விட தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணியாக இந்நிறுவனம் விளங்குகின்றது.

அமெரிக்கா அரசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஹூவாவே

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஹூவாவே டெலிகாம் உபகரணங்களுக்கான தடையை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜெர்மணி நாடுகளில் விதிகப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களை விட மிகவும் சவாலான விலையில் பல்வேறு வசதிகளை ஹூவாய் வழங்குகின்றது.

மேலும் இந்த வழக்கில் அமெரிக்கா அரசு எவ்விதமான ஆதாரமும் இல்லாமல் பொய்யான முறையில் கருத்தை தினித்து தடை செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஹூவாவே மீது அமெரிக்கா கடுப்பில் இருக்க காரணங்களில் மிக முக்கியமான ஒன்றாக ஆப்பிள் உட்பட பல்வேறு மொபைல் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி முன்னேறி வருகின்றது.

ஆப்பிள் நிறுவனத்தை விட புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் வழங்குவதில் ஹூவாவே முன்னணி இடத்தை பெற்று வருகின்றது என்பதனை மறுப்பதற்க்கில்லை.