ரூ.497 க்கு 105GB டேட்டா வழங்கும் ஐடியா

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமான ஐடியா தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.5GB 4ஜி டேட்டாவை 70 நாட்களுக்கு ரூபாய் 497 கட்டணத்தில் வழங்குகின்றது.

ஐடியா 497

  • தினமும் 1.5ஜிபி டேட்டா பயன்பாடு வழங்கப்படும்.
  • வரம்பற்ற ஐடியா டூ ஐடியா அழைப்புகள்
  • 3000 நிமிட இலவச அழைப்புகள் மற்ற நெட்வொர்குகளுக்கு வழங்கப்படுகின்றது.

ஐடியா அறிமுகப்படுத்தியுள்ள புதிய பிளானில் வாடிக்கையாளர்கள் தினமும் 1.5ஜிபி 4ஜி டேட்டா மற்றும் வரம்பற்ற ஐடியா டூ ஐடியா அழைப்புகளை பெறலாம். இதுதவிர மற்ற நெட்வொர்குகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள 3000 நிமிடங்கள் இலவசமாக வழங்கப்படும் அதன் பிறகு பிளான் அடிப்படையிலான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த பேக் வேலிடிட்டி காலம் 70 நாட்களாகும்.  மேலும் இது குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எஸ்எம்எஸ் அல்லது பாப்அப் வாயிலாக வழங்கப்படுகின்றது.

இதுபோன்ற பிளானை ஏர்டெல் நிறுவனம் 56 நாட்கள் வேலிடிட்டி உடன் ரூபாய் 499 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகளுடன் தினமும்1.25ஜிபி 4ஜி டேட்டா தரவை வழங்குகின்றது. மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூபாய் 244, Rs. 399, Rs. 499 மேலும் பல பிளான்களின் வேலிடிட்டி காலம் 56 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

Recommended For You