ஃப்ளிப்கார்ட் ஐடியா கூட்டனி : 30GB டேட்டா பெற என்ன வழி ?

இந்தியாவின் முதன்மை இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து மூன்றாவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமான ஐடியா தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு 30ஜிபி டேட்டா சலுகையை வழங்குகின்றது.

ஃப்ளிப்கார்ட் ஐடியா கூட்டனி

ஃப்ளிப்கார்ட் அன்லைன் தளத்தில் ரூ.4000 முதல் ரூ.25,000 வரையிலான விலை கொண்ட  லெனோவா, மைக்ரோமேக்ஸ், மோட்டோரோலா மற்றும் பானாசோனிக் போன்ற தயாரிப்பாளர்களின் 4ஜி ஸ்மாரட்போன்களுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.

இதனை ஐடியாவின் புதிய மற்றும் பழைய வாடிக்கையாளர்கள் என இருவருக்குமே புதிதாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இதனை பெறுவது எவ்வாறு ?

ஐடியா தங்களுடைய ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் ரூபாய்.356 மற்றும் ரூபாய்.191 க்கு என இருவிதமான ரீசார்ஜ் பிளான்களில் ஒன்றை தேர்ரஃவு செய்தால் கீழ வழங்கப்பட்டுள்ள அளவுகளில் தரவுகளை பெறமுடியும்.

ஐடியா வாடிக்கையாளர்கள் ரூபாய்.191 கொண்டு ரீசார்ஜ் செய்தால் 10 ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. எவ்விதமான தினசரி கட்டுப்பாடு இல்லாமல் தரவுகள் கிடைக்கும்.

மற்றொரு பிளான் முறையான ரூபாய் 356 க்கு ரீசார்ஜ் செய்தால் 30ஜிபி இலவச இலவச டேட்டாவை பெறமுடியும், மேலும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் உட்பட எவ்விதமான தினசரி கட்டுப்பாடு இல்லாமல் தரவுகள் கிடைக்கும்.

இந்த சலுகையை பெற புதிதாக ப்ளீப்கார்ட் தளத்தில் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கியவர்கள் மட்டுமே பெற இயலும். இது போன்றதொரு மற்றொரு சலுகையை அமேசான் மற்றும் வோடபோன் இணைந்து வழங்கியுள்ளது.

Recommended For You