10 ஜிபி இலவச டேட்டாவுடன் ஐடியா வோல்ட்இ சேவை தொடங்கியது

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஐடியா செல்லுலார் நிறுவனம், தமிழ்நாடு உட்பட மகாராஷ்டிரா (கோவா), குஜராத், கேரளா, ஆந்திர பிரதேசம் (தெலுங்கானா), மற்றும் மத்தியப் பிரதேசம் (சத்தீஸ்கர்) ஆகிய 6 வட்டங்களில் வோல்ட்இ சேவையை அதிகார்ப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

ஐடியா வோல்ட்இ

10 ஜிபி இலவச டேட்டாவுடன் ஐடியா வோல்ட்இ சேவை தொடங்கியது

முதன்முறையாக இந்தியாவில் 4ஜி வோல்ட்இ சேவையை நாடு முழுவதும் வழங்கி வரும் ஜியோ டெலிகாம் நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் வோடபோன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் குறிப்பிட்ட சில வட்டங்களில் வழங்கி வரும் நிலையில் , தற்போது ஐடியா செல்லுலார் நிறுவனமும் வாய்ஸ்ஓவர் எல்டிஇ வழியாக உயர்தர அழைப்புகளை வழங்க தொடங்கியுள்ளது.

ஐடியா செல்லுலார் வாடிக்கையாளர்கள் மே 2ந் தேதி முதல் தமிழ்நாடு உட்பட மகாராஷ்டிரா (கோவா), குஜராத், கேரளா, ஆந்திர பிரதேசம் (தெலுங்கானா), மற்றும் மத்தியப் பிரதேசம் (சத்தீஸ்கர்) ஆகிய 6 வட்டங்களில் வோல்ட்இ சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில் முதல் வோல்ட்இ அழைப்பினை அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கொள்ளும் பயனாளர்களுக்கு 10 ஜிபி 4ஜி டேட்டாவை முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது.

4ஜி நெட்வொர்க் சேவையை  Single Radio Voice Call Continuity (SRVCC) முறையின் வாயிலாக 4ஜி வோல்ட்இ சேவையை பெறாத இடங்களில் தானாகவே 3ஜி அல்லது 2ஜி சேவை வாயிலாக குரல் வழி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

10 ஜிபி இலவச டேட்டாவுடன் ஐடியா வோல்ட்இ சேவை தொடங்கியது

வோல்ட்இ என்றால் என்ன ?

வாய்ஸ் ஓவர் எல்டிஇ எனப்படுகின்ற (Voice over LTE VoLTE is pronounced as Vee O LTE) ஒரே சமயத்தில் வாய்ஸ் மற்றும் டேட்டாவை இயக்கும் நுட்பம் ஆகும். எல்டிஇ தொடர்பு உள்ள எண்ணிற்கு அழைத்தாலும் டேட்டா தொடர்ந்து இயக்கப்படும். அதுவே குறைந்த தரம் கொண்ட 3ஜி மற்றும் 2ஜி எண்களுக்கு அழைத்தால் டேட்டா தொடர்பு துண்டிக்கப்படும். டேட்டா இல்லாமல் வோல்டிஇ எண்களுக்கு அழைத்தாலும் தானாகவே டேட்டாவை நெட்வொர்க் செயல்படுத்திக் கொள்ளும். எல்டிஇ (LTE-  Long Term Evolution) என்றால் உயர்வேகத்தில் டேட்டாவை பெறலாம், அதுவே வோல்டிஇ என்றால் உயர்தரத்தில் அழைப்புகளை பெறலாம்.

தற்போது 4ஜி சிம் கார்டினை பயன்படுத்தும் ஐடியா வாடிக்கையாளர்கள் மற்றும் பழைய சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் 4ஜி சேவைக்கு தானாகவே மாறிக்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

10 ஜிபி இலவச டேட்டாவுடன் ஐடியா வோல்ட்இ சேவை தொடங்கியது 10 ஜிபி இலவச டேட்டாவுடன் ஐடியா வோல்ட்இ சேவை தொடங்கியது