இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஐடியா செல்லுலார், கார்பன் மொபைல் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பு கேஷ்பேக் சலுகைகளுடன் சவாலான விலையில் டேட்டா திட்டங்களை அறிவித்துள்ளது.

ஐடியா-கார்பன் கூட்டணி

ஐடியா நிறுவனம் ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்களுடன் ஜியோ நிறுவனத்தை எதிர்கொள்ளும் வகையில் கார்பன் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளருடன் இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் திட்டத்தை அறிவித்துள்ளது.

கார்பன் 4ஜி ஸ்மார்ட்போன்

கார்பன் நிறுவனத்தின் A41 பவர், A9 இந்தியன் மற்றும் யுவா 2 ஆகிய மொபைல்களுடன் ஐடியா சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2000 வரை கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கப்பெறும்.

முதல் தவனையாக அனைத்து மொபைல்களுக்கும் 18 மாதங்கள் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.500 கேஷ்பேக் , அதன்பிறகு அடுத்த 18 மாதங்களில் ரூ.1000 கேஸ்பேக் சலுகையை மேலே குறிப்பிடப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படுகின்றது.

மேலும் இந்த கூட்டணியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.169 கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிளானில் நாள் ஒன்றுக்கு 1ஜிபி 4ஜி டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

கார்பன் ஃபீச்சர் போன்

கார்பன் நிறுவனத்தின் K310n, K24+ மற்றும் K9 ஜம்போ ஆகிய மொபைல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1000 வரை கேஷ்பேக் சலுகை வழங்கப்படுகின்றது.

முதல் தவனையாக அனைத்து மொபைல்களுக்கும் 18 மாதங்கள் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.500 கேஷ்பேக் , அதன்பிறகு அடுத்த 18 மாதங்களில் ரூ.500 கேஸ்பேக் சலுகையை மேலே குறிப்பிடப்பட்ட மாடல்களுக்கு வழங்கப்படுகின்றது.

மேலும் இந்த கூட்டணியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.145 கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிளானில் 500 எம்பி  டேட்டா, வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 500 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.