தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் ரூ.392 ரீசார்ஜ் பிளான் விபரம் : ஐடியா

ஐடியா செல்லூலார் நிறுவனம், புதிதாக தினமும் 1.4 ஜி.பி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்பை ரூ.392 கட்டணத்தில் 60 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கப்படுகின்றது.

வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஐடியா செல்லூலார் புதிதாக ரூ.392 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.4 ஜி.பி. டேட்டா 2G/3G/4G முறையில், 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடேட் அழைப்புகள் என 60 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிவிக்கப்பட்டள்ளது. பொதுவாக ஐடியா நிறுவனத்தின் வரம்பற்ற அழைப்புகள் முறை என்பது, ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள், அல்லது 1000 நிமிடங்கள் வரை ஒரு வாரத்திற்கு வழங்கப்பட உள்ளது.

தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் ரூ.392 ரீசார்ஜ் பிளான் விபரம் : ஐடியா

முந்தைய ஐடியா பிளான் ரூ.399 கட்டணத்திலான திட்டத்தில் புதிதாக மாற்றப்பட்டு நாள் ஒன்றுக்கு 1 ஜி.பி. டேட்டா 2G/3G/4G முறையில் (முன்பு .4 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது), 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடேட் அழைப்புகள் என 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக அறிவிக்கப்பட்டள்ளது. பொதுவாக ஐடியா நிறுவனத்தின் வரம்பற்ற அழைப்புகள் முறை என்பது, ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள், அல்லது 1000 நிமிடங்கள் வரை ஒரு வாரத்திற்கு வழங்கப்பட உள்ளது.

ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களும் சமீபத்தில் ரூ.399 பிளானை தினமும் 1 ஜி.பி. டேட்டா 2G/3G/4G முறையில் வழங்குவதுடன் , வரம்பற்ற அழைப்பு முறையை வழங்குகின்றது.

தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கும் ரூ.392 ரீசார்ஜ் பிளான் விபரம் : ஐடியா

ஜியோ

ஆனால், தொடர்ந்து ஜியோ ரூ.398 கட்டணத்திலான பிளானில் நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. டேட்டா, 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடேட் அழைப்புகள் என 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றது.

ஜியோவின் மற்றொரு ரூ.399 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜி.பி. டேட்டா, 100 எஸ்எம்எஸ், மற்றும் அன்லிமிடேட் அழைப்புகள் என 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும்.