தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஐடியா செல்ல்லார் நிறுவனம், தினசரி 2 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டத்தை ரூ.249 கட்டணத்தில் ஐடியா அறிமுகம் செய்துள்ளளது.

ஐடியா 249

தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்

பிஎஸ்என்எல், ஜியோ , வோடபோன் போன்ற நிறுவனங்கள் வழங்குகின்ற இது போன்ற திட்டங்களுக்கு போட்டியாக ஐடியா நிறுவனம் ரூ.249 கட்டண திட்டத்தை  வெளிப்படுத்தி பயனாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகின்றது.

3G/4G வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா  அதாவது 56 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்பு நன்மைகளுடன், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.

வரம்பற்ற அழைப்பு நன்மை என்பது வாரத்திற்கு 1000 நிமிடங்கள் அல்லது நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்த இயலும். ஆனால் ரோமிங் சமயத்தில் அழைப்புகளை பெற மேற்கொள்ள வழி வகுக்கின்றது.

இதே போன்ற திட்டத்தை ஏர்டெல் ரூ.249 கட்டணத்தில் நாற் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகின்றது. ஜியோ டெலிகாம் ரூ.198 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றது.