ரூ.227-க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால், 1.4 ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா

இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஐடியா செல்லூலார் , ரூ. 227 கட்டணத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி டேட்டா வழங்கும் திட்டதில் பல்வேறு இலவச அம்சங்களை இணைத்துள்ளது.

ஐடியா ரூ.227

சமீபத்தில் ஏர்டெல் வெளியிட்டிருந்த இலவச ஹலோ டியூன் வழங்கும் ரூ.219 திட்டத்திற்கு நேரடி சவாலாக ஐடியா செல்லுலார் வெளியிட்டுள்ள ரூ.227 திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 1.4 ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், அளவில்லா உள்ளூர், வெளியூர் அழைப்புகள் மற்றும் ரோமிங் உட்பட, இலவச டைலர் டோன் , இலவச மிஸ்டு கால் அலெர்ட் 15 நாட்களுக்கு வழங்கப்படுகின்ற இந்த பிளான் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்ற கூடுதல் சலுகையாக இலவச போட்டிகள் வாயிலாக சிறப்பு சலுகைகளை வழங்க்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதற்கட்டமாக குறிப்பிட்ட சில வட்டாரங்களில் செயற்படுத்த தொடங்கியுள்ள இந்த பிளான் மற்ற வட்டங்களில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

முக்கிய குறிப்பாக அன்லிமிடெட் கால் என்றால் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டும் வழங்கப்படுகின்றது. உங்கள் மொபைல் நெம்பருக்கு இந்த சலுகை உள்ளதா என்பதனை அறிய ஐடியா ஆப் அல்லது இணையதள்ளத்தை பயன்படுத்தலாம்.

 

Recommended For You