தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை போட்டியாளர்களை ஈடுகட்ட தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றன, அந்த வரிசையில் ஐடியா ரூ.93 கட்டணத்தில் 10 நாட்கள் கால அளவு கொண்ட திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஐடியா 93

ஜியோ வழங்கி வருகின்ற ரூ.98 டேட்டா திட்டத்தில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வழங்குவதுடன் தினசரி பயன்பாட்டுக்கு 150 எம்பி டேட்டா என மொத்தம் 14 நாட்கள் வேலிடிட்டி கொணட இந்த திட்டத்தில் மொத்தமாக 2.1GB டேட்டா வழங்கப்படுகின்றது.

இந்த திட்டத்திற்கு ஏர்டெல் ரூ.93 பிளானை அறிவித்திருந்தது குறிப்பிடதக்கதாகும். ஏர்டெல் பிளானில் 10 நாட்கள் வேலிடிட்டியுடன் மொத்தம் 1ஜிபி டேட்டாவை 3ஜி அல்லது 4ஜி வாயிலாக பெறுவதுடன் வரம்பற்ற அழைப்புகள் நன்மையை வழங்குவதாக குறிப்பிட்டிருந்தது.

மேலே வழங்கப்பட்டுள்ள இரு திட்டங்களுக்கு எதிராக ஐடியா 93 திட்டத்தில் அதிகபட்சமாக  2ஜி அல்லது 3ஜி அல்லது 4ஜி வாயிலாக 1ஜிபி டேட்டா வழங்குவதுடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குவதுடன் உள்வரும் ரோமிங் அழைப்புகளை மட்டுமே இந்த திட்டத்தில் பெறலாம்.

மேலும் ஐடியாவின் வரம்பற்ற அழைப்புகள் எனப்படுவது தினசரி பயன்பாட்டுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது 7 நாட்களுக்கு 1000 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்படும். அதன் பிறகு விநாடிக்கு 1 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கு ஐடியா ஆப் அல்லது *150*93# USSD எண்ணுக்கு அழைக்கலாம்.