30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோவின் சலுகைகளை தொடர்ந்து , மற்ற நிறுவனங்கள் மிகவும் சவாலான திட்டங்களை செயற்படுத்தும் நிலையில் 30ஜிபி இலவச டேட்டாவை ஐடியா செல்லூலார் அதிரடியாக அறிவித்துள்ளது.

ஐடியா ஆஃபர்

30ஜிபி இலவச டேட்டா வழங்கும் ஐடியா ஆஃபர் முழுவிபரம்

வோடபோன்-ஐடியா இணைப்பை தொடர்ந்து , பல்வேறு சலுகைகளை வழங்க உள்ள நிலையில், ஆதித்தியா பிர்லா குழுமத்தின் ஐடியா செல்லூலார் , இந்தியாவில் ஆறு வட்டாரங்களில் 4ஜி வோல்ட்இ சேவை அறிமுகம் செய்தது, பின்பு கூடுதலாக ஒன்பது வட்டராங்கள் மற்றும் இறுதியாக ஐந்து வட்டராங்களில் 4ஜி வோல்ட்இ சேவையை துவங்கியது. தற்சமயம் இந்தியா முழுவதும் 20 வட்டாரங்களில் ஐடியா நிறுவனம் வோல்ட்இ சேவையை வழங்கி வருகிறது. இதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இலவச டேட்டாவை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் வோல்ட்இ சேவை தற்சமயம், கோவா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, குஜராத், கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஹிமாச்சல பிரதேசம், ஒடிசா, அசாம், வட கிழக்கு சேவை பகுதி (NESA) மற்றும் ஜம்மு & காஷ்மீர் ஆகிய வட்டங்களில் கிடைக்க தொடங்கியுள்ளது.

இலவச டேட்டா பெறுவது எவ்வாறு ?

முதற்கட்டமாக ஐடியா 4ஜி வோல்டிஇ சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஜிபி இலவச டேட்டா வழங்கப்படுகின்றது. பின்பு ஒரு மாத முடிவில் அல்லது நான்கு வாரங்களுக்கு பிறகு வோல்ட்இ சேவை குறித்த விமர்சனங்களை வழங்குவோருக்கு 10ஜிபி டேட்டா மற்றும் எட்டாவது வாரத்தில் மீண்டும் விமர்சனம் வழங்குவோருக்கு 10ஜிபி டேட்டா என மொத்தம் 30ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

தற்சமயம் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் மாடல்களில் மட்டுமே ஐடியா வோல்ட்இ வழங்கப்பட்டுள்ளது. விரைவில் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களில் இந்த வோல்ட்இ வழங்கப்பட இருக்கிறது. 4ஜி கிடைக்காத இடங்களில் தானாக 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க்-க்கு மாறிக் கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.