365 நாட்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் அழைப்புகள் ஐடியா ரீசார்ஜ் பிளான்

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான வோடபோன் ஐடியா, தனது ஐடியா செல்லூலார் பயனர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகின்ற ரூ.1999 ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

வோடபோன் மற்றும் ஐடியா என இரு நிறுவனங்களும் வாய்ஸ் கால், டேட்டா, எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளையும் ஒரு வருடத்துக்கு வழங்கும் வகையில் ரூ.999, மற்றும் ரூ.1999 பிளான்களை வெளியிட்டுள்ளது.

ஐடியா ரூ.999 ரீசார்ஜ் பிளான்

முதற்கட்டமாக பஞ்சாப் வட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ரூ.999 ரீசார்ஜ் ஆஃபரில் டேட்டா பயனை பெரிதும் விரும்பாதவருகளுக்கு 12ஜிபி டேட்டாவை 365 நாட்களுக்கு கொடுத்துள்ளது. தினமும் 100 எஸ்எம்எஸ்களையும், அளவில்லா லோக்கல் கால்களையும் பெற முடியும். மற்ற வட்டங்களில் அடுத்த சில நாட்களுக்குள் விரிவுப்படுத்த வாயுப்புகள் உள்ளது.

அடுத்ததாக கேரளா வட்டத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ள தினமும் 1.5ஜிபி வரை டேட்டாவை பெற முடியும். இந்த ரீசார்ஜ் பிளானில் லோக்கல் எஸ்டிடி கால்களையும் அளவில்லாமல் பெறலாம். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் மதிப்பு ரூ.1999 ஆகும்.

சிட்டி பேங்க் மற்றும் ஐடியா ஆஃபர்

சிட்டி வங்கியின் கிரெடிட் கார்டு பயனாளர்கள் ரூ.4000 மதிப்புள்ள பொருட்களை கிரெடிட் கொண்டு வாங்கும்போது, இலவசமாக தினமும் 1.5ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா வாய்ஸ் கால் பெறலாம். குறிப்பாக இந்த திட்டத்தில் ஆஃபரை பெற கோவை மற்றும் சென்னை ஐடியா பயனாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.