ஜியோ போட்டியை சமாளிக்க வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் இணைந்து கூட்டாக தொலைதொடர்பு சாரந்த சேவைகளை வழங்கும் நோக்கில் செயல்படுவதற்கான முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.
வோடபோன்-ஐடியா
இரு நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த கூட்டு நிறுவனங்களுக்கான தலைவராக குமார் மங்கலம் பிர்லா இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரு நிறுவனங்களும் இணைவதனால் மொத்தம் 40 கோடி வாடிக்கையாளர்கள் உயர உள்ளதால் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னிலை வகித்து வந்த ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் முதன்மையான நிறுவனமாக வோடபோன் ஐடியா விளங்கும். மேலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமாக விளங்கும்.
வோடபோன் நிறுவனம் 45 சதவீதம், ஐடியா புரோமோட்டார்ஸ் 26 சதவீதம் மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்துக்கு 9.5 சதவீகிதமும் பங்குகள் பிரிக்கப்படும். ( ஒரு பங்குக்கு ரூ.130 அடிப்படையில்பிரிக்கப்படும் )
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவராக உள்ள குமார் மங்கலம் பிர்லா கூட்டு நிறுவனங்களுக்கு தலைமை செயல் அதிகாரியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் தலைமை வணிகப் பிரிவு தலைவரை வோடபோன் நியமிக்க உள்ளது.