ரூ.2500 விலையில் ஐடியா நிறுவனம் தயாரிக்கும் 4ஜி மொபைலில் தற்போது வோடஃபோன் நிறுவனமும் கூட்டணியாக இணைந்துள்ளது. ஜியோபோனை வீழ்த்துமா இந்த கூட்டணி ?

ஐடியா-வோடஃபோன் 4ஜி மொபைல்

ஜியோ 4ஜி சேவையில் இலவசங்களை 11 மாதங்களுக்கு முன்பாக அறிமுகம் செய்தபோது சாதாரனமாக எண்ணிய முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனியும், இதுபோன்ற தவறை திரும்ப செய்ய வாய்ப்பில்லை என்பதனை உறுதி செய்யும் வகையில் சுவாரஸ்யமான பல்வேறு அறிவிப்புகளை இனி காணலாம்.

ஜியோபோன்

ரூபாய் 1500 டெபாசிட் தொகையுடன் மூன்று வருடங்களுக்கு பிறகு கட்டணத்தை திருப்பி தருவதாஎக ஜியோ இன்ஃபோகாம் அறிவித்துள்ள நிலையில் இந்த 4ஜி பீச்சர் மொபைல் முற்றிலும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.153 கட்டணத்தில் தினமும் 512 MB டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ஜியோ ஆப்ஸ் பயன்பாடு வழங்கப்பட்டுள்ளது.

4ஜி பீச்சர் மொபைல் போன்

சில நாட்களுக்கு முன்பாக ஐடியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் ரூ.2500 விலைக்குள் 2ஜி முதல் 4ஜி சேவையை பயன்படுத்தும் வகையிலும் ஐடியாஃபோன் இருக்கும் என தெரிவித்திருந்தார்.

ஆரம்பகட்டத்தில் ஐடியா மட்டுமே பிரத்யேகமாக தயாரிப்பதாக இருந்த 4ஜி ஃபீச்சர் மொபைல் வடிவமைப்பில், தற்போது இந்த கூட்டணியில் வோடபோன் நிறுவனமும் இணைந்துள்ளதால், மிகவும் சவாலான டேட்டா பிளான்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு இந்த கூட்டணி வழங்கும் என்பது உறுதியாகியுள்ளது.

இன்டெக்ஸ் 4ஜி பீச்சர் மொபைல்

சமீபத்தில் இன்டெக்ஸ் வெளிப்படுத்திய டர்போ பிளஸ் 4ஜி பீச்சர் மொபைலில் ஜியோபோனில் உள்ள அம்சங்களை பெற்றிருந்தாலும் எந்த நெட்வொர்க்கிலும் பயன்படுத்தும் வகையில் செயல்படும்.

ஜியோஃபோனுக்கு ஆப்பு..!

ஜியோஃபோன் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் டெபாசிட் தொகை ரூ.1500 என்பதனால் வாடிக்கையாளர்களை ஆரம்பகட்டத்தில் கவர்ந்தாலும், போட்டியாளர்களும் இதோ போன்ற சேவைக்கு மாறுபட்ட திட்டத்தை வெளிப்படுத்தும் என்பதனால் முன்பை போல மிக வேகமாக ஜியோ 2ஜி சேவை வாடிக்கையாளர்களை இணைப்பது என்பது மிகவும் கடினம்தான்.

எனவே, ஜியோ நிறுவனத்தின் போனை வாங்குவதனை கொஞ்ம் தள்ளிபோடுங்க..!