5g

இந்தியாவில் பரவலாக தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் 5ஜி சோதனை ஓட்டத்தை ஜனவரி முதல் மார்ச் 2020 வரையிலான கால கட்டத்தில் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களும் உறுதி செய்துள்ளார்.

சோதனை ஓட்டம் நடப்பு காலாண்டின் இறுதியில் நடைபெற உள்ள நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கூறுகையில், அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில், அதாவது மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஏலம் நடத்தப்பட உள்ளது. எனவும், டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் விரைவில் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையத்தை சந்தித்து விலை நிர்ணயம் மற்றும் அலைக்கற்றை அளவு ஏலம் உள்ளிட்டவற்றை குறித்து பரிசீலிக்க உள்ளது. இந்த கூட்டடம் டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.

5ஜி அலைக்கற்றைக்கு பரிந்துரைக்கப்பட்ட அடிப்படை விலை ஒரு மெகா ஹெர்ட்ஸ் தொகுதி 492 கோடி ரூபாய் எனவும், முன்மொழியப்பட்ட குறைந்தபட்ச விற்பனையுடன் 20 மெகா ஹெர்ட்ஸ் வாங்க வேண்டும். எனவே, மொத்தம் 8,293.95 மெகா ஹெர்ட்ஸ் 4 ஜி மற்றும் 5 ஜி ஸ்பெக்ட்ரம் விற்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.  அடிப்படை விலையில் விற்கப்பட்டால் இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் ரூ. 5.86 லட்சம் கோடியை திரட்ட இயலும்.

12 டெலிகாம் ஆப்ரேட்டர்கள் மற்றும் உபகரணங்களை வழங்கும் நிறுவனங்கள் இதற்கான ஆவனத்தை டிராய் வசம் தாக்கல் செய்துள்ளது. ஆனால் ஹூவாய் நிறுவன 5ஜி நுட்பத்தை இந்தியா அனுமதிக்குமா என்பதனை தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.