உலகின் குறைந்த விலை மொபைல் டேட்டா வழங்கும் நாடாக இந்தியா

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் இந்தியாவின் டேட்டா கட்டணம் மிகப்பெரிய அளவில் சரிந்தது. இந்நிலையில் உலகின் குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வழங்கும் நாடாக இந்தியா விளங்குவதாக இங்கிலாந்தின் கேபிள். கோ. யூகே நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

230 நாடுகளில் இருந்து 6313 டேட்டா பிளான்களில் மேற்கொண்ட ஆய்வில் 1 ஜிபி மொபைல் டேட்டா கட்டணம் இந்தியாவில் ரூபாய் 1.75 பைசா மட்டும் ஆனால் உலகின் விலை அதிகப்படியான மொபைல் டேட்டா வழங்கும் நாடாக விளங்கும் ஜிம்பாப்வேயில் ஒரு ஜிபி மொபைல் போன் டேட்டா கட்டணமாக ரூபாய் 5350 ஆக உள்ளது.

சர்வதேச அளவில் ஒரு ஜிபி டேட்டாவுக்காக சராசரியாக ரூபாய் 600 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு முன்னதாக 2ஜி மற்றும் 3ஜி டேட்டா கட்டணங்களின் விலை ஒரு ஜிபி-க்கு ரூபாய் 300 வரை வசூலிக்கப்பட்டது.

உலகில் சீனாவிற்கு அடுத்தப்படியாக ஸ்மாட்போன் பயன்படுத்துவதில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். இந்தியாவில் சுமார் 43 கோடி மக்களால் ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படுகின்றது.

உலகின் குறைந்த விலை மொபைல் டேட்டா வழங்கும் நாடாக இந்தியா

இந்தியாவை தொடர்ந்து கிரிகிஸ்தான் நாட்டில் ஒரு ஜிபி மொபைல் டேட்டா கட்டணம் ரூபாய் 18.90 க்கு கிடைக்கின்றது. அமெரிக்காவில் ரூபாய் 880 க்கும்  மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும், ரூ. 100க்கும் மேல் ஒரு ஜிபி டேட்டாவுக்காக கட்டணமாக செலுத்தப்படுகின்றது.