உலகிலேயே அதிக ஸ்பேம் அழைப்புகளை பெறும் இந்தியர்கள்

பிரசத்தி பெற்ற ட்ரூகாலர் வெளியிட்டுள்ள சர்வே முடிவுகளில் மாதந்தோறும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்கள் சராசரியாக 22 ஸ்பேம் அழைப்புகளை பெறுவதாக ட்ரூகாலர் தெரிவிக்கின்றது.

ஸ்பேம் அழைப்புகள்

தேவையில்லாத அழைப்புகளை தடுக்க பல்வேறு செயிலிகள் புழகத்தில் இருந்தாலும் இவற்றில் பிரசத்தி பெற்ற ஒன்றான ட்ரூகாலர் ஆப் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் உலகிலேயே அதிக ஸ்பேம் அழைப்புகளை இந்திய ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பெறுவதாக குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக இந்திய ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மாதந்தோறும் சராசரியாக 22 ஸ்பேம் அழைப்புகளை பெறுகின்றனர்.இவ்வாறு வருகின்ற தேவையற்ற அழைப்புகளில் டெல்காம் துறை அழைப்புகளான டேட்டா பிளான் உள்ளிட்ட பல்வேறு ப்ரோமோஷன் சலுகைகளை 54 % பங்களிப்பை பெறுகின்றன.

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த இருநாடுகளமே மாதம் 20.7 போலி அழைப்புகளை பெறுகின்றன.

டாப் 20 நாடுகளின் பட்டியல் படம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

ட்ரூகாலர் வெளியிட்டுள்ள மொத்தம் உள்ள 20 நாடுகளின் பட்டியலில் மாந்தோறும் சராசரியாக 7.7 அழைப்புகளை குறைவாக பெறும் நாடாக கென்யா உள்ளது.

Recommended For You