சிஸ்கோ வெளியிட்டுள்ள விஷூவல் நெட்வொர்க்கிங் இன்டெக்ஸ் என்ற ஆய்வறிக்கையில் 2021க்குள் இணைய பயனளாளர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக அதாவது 829 மில்லியனாக உயரும் என தெரிவித்துள்ளது.

சிஸ்கோ இணைய ஆய்வறிக்கை

சிஸ்கோ வெளியிட்டுள்ள விஷூவல் நெட்வொர்க்கிங் இன்டெக்ஸ் (Visual Networking Index- VNI) ஆய்வறிக்கையில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன் விபரம் பின் வருமாறு;-

தற்போது இணைய பயனாளர் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 28 சதவிகிதமாக அதாவது 37.3 கோடியாக உள்ள எண்ணிக்கை 2021-ல் மொத்த இந்திய மக்கள் தொகையில் 59 சதவிகிதமாக அதாவது 82.9 கோடி மக்கள் இணையத்தை பயன்படுத்துவார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

2016 -ல் 1.6 பில்லியன் நெட்வொர்க்கிங் கருவிகள் உள்ள நிலையில் 2021-ல் இதன் எண்ணிக்கை 2 பில்லியன் கருவிகளாக உயரும்.

2ஜி முதல் 4ஜி எல்டிஇ வரையிலான சேவைகளில் இணையத்தை பெறுவார்கள்.

வேகமான மற்றும் உயர் ரக இணைய இணைப்பின் எண்ணிக்கை மற்றும் நவீன கருவிகள் , அதிகப்படியான டேட்டா மற்றும் வீடியோ சேவை பெறுவோரின் எண்ணிக்கை உயரும், மேலும் மொபைல் மற்றும் வை-ஃபை வாயிலாக இணையம் பெறுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்.

ஐபி டிராஃபிக் தற்போது உள்ளதை விட 4 மடங்காக உயரும், தற்போது மாதந்திர பயன்பாட்டில் 1.7 எக்ஸ்பைட்ஸ் டேட்டாவாக உள்ள இது 6.7 எக்ஸ்பைட்ஸ் டேட்டாவாக உயரும் என ஆய்வறிக்கை குறிப்பிடுகின்றது.

மொத்த டேட்டா பயன்பாட்டில் வீடியோ வழியான சேவைக்கு பயன்படுத்துவோர் எண்ணிக்கை 76 சதவிகிதமாக அதிகரிக்கும் இதனால் 2021ல் மாதம் ஒன்றுக்கு 84 பில்லியன் நிமிட வீடியோ பார்க்கப்படலாம் அல்லது ஒவ்வொரு மாதமும் விநாடிக்கு 2000 ஆயிரம் மணி நேர நிமிட வீடியோவை மக்கள் காணலாம் என சிஸ்கோ ஆய்வறிக்கை வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.