விநாடிகளில் மூன்று ஹெச்டி படங்களை தரவிறக்க இன்ஃபிராரெட் வை-ஃபை (Infrared Wi-Fi) நுட்பத்தை நெதர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இன்ஃபிராரெட் வை-ஃபை

அக ஊதாகதிர் எனப்படும் Infrared அலைகளை கொண்டு மிக வேகமாக இயங்கும் வகையிலான வை-ஃபை சேவையை நுட்பத்தை நெதர்லாந்து நாட்டின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இது சாதரன வை-ஃபை வேகத்தை 300 மடங்கு அதாவது அதிகபட்சமாக விநாடிக்கு 112 ஜிகாபிட்ஸ் வேகத்தில் (112 gigabits per second) தரவிறக்கும் திறன் பெற்றதாக கிடைக்க உள்ள இந்த வை-ஃபை சேவை குறிப்பிட்ட ஒரு அறைக்குள் மட்டுமே பயன்படுத்த எதுவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் அல்லது டெப்ளெட் பயனாளர்களுக்கு என தனியான பிரத்தியேகமாக ஆண்டனா கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இன்ஃபிராரெட் வை-ஃபை ஆன்டனாக்கள் மிக வேகமாக பல்வேறு வகையில் அக ஊதாகதிர்களை செலுத்தி அதிகபட்சமாக உயர்தர திறன் பெற்ற முழுநீள மூன்று படங்களை விநாடிகளில் தரவிறக்கம் செய்யலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மற்றும் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுகும் வகையில் இந்த வை-ஃபை சேவையை பெற முடியும் என்பதனால் மிகுந்த பாதுகாப்பு தன்மை கொண்டதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.