இன்டெல் XMM 8160 5G மோடம் அறிமுகமானது; முதல் டிவைஸ் 2020 முதல் அரையாண்டில் விற்பனைக்கு வரும்

XMM 8160 5G மல்டி மோடு மோடம் அறிமுகம் செய்துள்ளதாக இன்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மோடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதன் முக்கிய நோக்கமே, மொபைல், பிசி மற்றும் பிராட்பேண்ட் கேட்வேகள் மூலம் 5G கனெக்டிவிட்டியை அளிப்பதேயாகும்.

புதிய இன்டெல் 5G மோடம் நொடிக்கு 6Gbps வேகத்தில் டவுன்லோடு ஸ்பீடு கொண்டதாக இருக்கும். இந்த மோடங்கள் வரும் 2019ம் ஆண்டின் இரண்டாம் பகுதியில் வெளியிடப்படும் என்றும் 2020 ஆண்டின் பிற்பகுதியில் வர்த்தக ரீதியாக மார்க்கெட்க்கு விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் இன்டெல் செல்லுலார்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனால் 2020ல் அறிமுகமாகும் ஐபோன் உடன் புதிய 5G மோடம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டெல் XMM 8160 5G மோடம் அறிமுகமானது; முதல் டிவைஸ் 2020 முதல் அரையாண்டில் விற்பனைக்கு வரும்

புதிய சிங்கிள் சிப் ம்ல்டிமோடு பேஸ்பேன்ட் திறன்களுடன்’ கூடிய புதிய இன்டெல் XMM 8160 5G மோடம்கள் அளவில் சிறியதாக உருவாக்க தயாரிப்பு நிறுவனங்களுக்கு சபோர்ட் செய்கிறது. இந்த மோடம்களை பயன்படுத்துவதன் மூலம், இரண்டு மோடம்களை தனியாக இன்ஸ்டால் செய்வது தவிர்க்கப்படும். இன்டெல் இன்டகிரேட்டட் மல்டிமோடு சொலுசன்கள், LTE மற்றும் 5G (EN-DC) கனெக்டிவிட்டிக்கு உதவும். மேலும் 4G-களுக்கான பேக்வேர்ட் கம்படெபிலிட்டி அளிக்கும். 5G ஆக இருந்தால் நெட்வேர் இல்லை என்று தகவல் வரும் .

இதுமட்டுமின்றி XMM 8160 5G மோடம்கள் புதிய மில்லிமீட்டர் வேவ் (mmWave) ஸ்பெக்ட்ரம்ல்களுடன், சப் 6GHz NR சப்போர்ட்களுடன் டவுன்லோடு ஸ்பீட் 6Gbps-ஆக இருக்கும். இந்த மோடம் இன்டெல் நிறுவனத்தால் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இன்டெல் XMM 8160 5G மோடம் அறிமுகமானது; முதல் டிவைஸ் 2020 முதல் அரையாண்டில் விற்பனைக்கு வரும்

இதுமட்டுமின்றி பெரும்பாலான ஆண்டிராய்டு OEM-கள் 5G ஸ்மார்ட் போன்களை அடுத்த ஆண்டு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒன்பிளஸ், சாம்சங், மற்றும் சியோமி போன்ற நிறுவனங்களும் இதில் அடங்கும். ஆப்பிள் நிறுவனம் புதிய மொபைல் கேம்ஸ் ஒன்றை முதல் முறையாக 5G திறனில் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.