இந்தியாவின் முன்னணி 4ஜி சேவை வழங்கும் நிறுவனமாக உள்ள அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் இந்திய மொபைல் தயாரிப்பு இன்டெக்ஸ்-ம் இணைந்து 25ஜிபி கூடுதலான 4ஜி டேட்டாவை வழங்குகின்றது.

ரிலையன்ஸ் ஜியோ – இன்டெக்ஸ்

இந்திய மொபைல் தயாரிப்பு நிறுவனமான இன்டெக்ஸ் டெக்னால்ஜீஸ் விற்பனை செய்கின்ற அனைத்து 4ஜி மொபைல் மாடல்களுக்கும் இந்த சிறப்பு சலுகை பொருந்தும்.

அதாவது ரிலையன்ஸ் ஜியோ சிம் பெற்றுள்ள 4ஜி இன்டெக்ஸ் மொபைல் வாடிக்கையாளர்கள் ரூ.309 அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ.301 மதிப்பில் வழங்கப்படுகின்ற ஜியோ ஸ்பீடு பூஸ்டர் டேட்டா பேக்கில் உள்ள 5ஜிபி டேட்டா இலவசமாக 5 மாதங்களுக்கு வழங்கப்படும் , என்பதனால் மொத்தம் 25ஜிபி டேட்டா வரை பெறலாம்.

இந்த சலுகையை செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு பிறகு 4ஜி இன்டெக்ஸ் மொபைலில் ஜியோ சிம் ஏக்டிவேட் செய்த வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 31, 2018 வரை கிடைக்கப்பெறும்.

இன்டெக்ஸ் 4ஜி மொபைல் பட்டியல் பின் வருமாறு;- அக்வா 4.0 4G, அக்வா 4G மினி, அக்வா அமேஸ்+, அக்வா பவர் IV, அக்வா ப்ரைம் 4G, அக்வா ப்ரோ 4G, அக்வா ஸ்டராங் 5.1+, அக்வா டிரென்ட் லைட், Elyt-e1, Elyt-e7, அக்வா செல்பி, Aqua S1, அக்வா லையன்ஸ் 3, அக்வா ஸ்டைல் III,அக்வா லையன்ஸ் 2, அக்வா 5.5 VR+, அக்வா நோட் 5.5, அக்வா ஜெனித், க்ளவூட் Q11 மற்றும் க்ளவூட் ஸ்டைல் 4G ஆகியவற்றுக்கு கிடைக்க உள்ளது.

சமீபத்தில் ஜியோ நிறுவனம் 13 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளதாக முகேஷ் அம்பானி தனது ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.