இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான விளங்கும் வோடபோன் நிறுவனமும் ஐடெல் மொபைல் தயாரிப்பாளரின் கூட்டணியில் கூடுதல் இலவச டாக்டைம் வழங்குகின்றது.

ஐடெல் மற்றும் வோடபோன்

புதிய மற்றும் முந்தைய வோடபோன் சிம் பயனாளர்கள் ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 31, 2017 வரையிலான காலகடத்தில் ரூ. 900 மதிப்புள்ள ஐடெல் ஃபீச்சர் மொபைல்களை வாங்குபவர்களுக்கு மொபைல் விலைக்கு ஈடான டாகடைம் மதிப்பை இலவசமாக வழங்குகின்றது.

 

 

வோடபோன் பயனாளர்களுக்கு ரூ.100 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் ரூ. 50 இலவச கூடுதல் டாக்டைம் 18 மாதங்களுக்கு வழங்கப்படும் என உறுதிப்படுத்தியள்ளது. எனவே நீங்கள் ரூ.900 மதிப்புள்ள ஃபீச்சர் மொபைலை வாங்கினால் முழுபணமும் 18 மாதங்களில் திரும்ப கிடைக்கும்.

ஐடெல் மொபைல் நிறுவனத்தின் it2130, it2131, it2180, it5600, it5602, it5020, it5040, it5060, it5231, it 5232, it5233, it 5320, it5331, it5611, it5613, it5622, மற்றும் it7100 ஆகிய மாடல்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பன்டில் ஆஃபர் தமிழ்நாடு , சென்னை உள்ளிட்ட 21 தொலைத்தொடர்பு வட்டங்களிலும் இந்த சிறப்பு சலுகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ ஃபீச்சர் மொபைல் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள இலவச மொபைல் பாதுகாப்பு வைப்பு நிதியாக ரூ.1500 செலுத்தப்பட்ட தொகை 36 மாதங்களுக்கு பிறகு முற்றிலும் திரும்ப அழைக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.