இந்தியாவில் மிக குறைந்த கட்டடணத்தில் டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ , போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு என பிரத்தியேகமான திட்டத்தை ரூ.199 கட்டணத்தில் ஜீரோ டச் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ள நிலையில், போட்டியாளர்களான ஏர்டெல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா நிறுவனங்களின் குறைந்த விலை திட்டங்களை அறிந்து கொள்ளலாம்.
ஜியோ Vs போட்டியாளர்கள்
வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான சேவையை வழங்கும் நோக்கில் எவ்விதமான கூடுதல் அல்லது மறைமுக கட்டணமும் இல்லாமல் போஸ்ட்பெய்டு பயனாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் ஜீரோ டச் என்ற திட்டத்தை மற்ற போட்டி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையிலும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களின் எண்ணத்தை மாற்றியமைக்கும் நோக்கில் ஜியோ முதல் பிளானை அறிவித்துள்ளது.
வோடபோன் ரூ. 399
வோடபோன் நிறவனம் ரெட் பிளான் என்ற பெயரில் போஸ்ட்பெய்டு திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில் குறைந்தபட்ச ரூ. 399 திட்டத்தில் மாதந்தோறும் 20 ஜிபி டேட்டா வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு நண்மைகளுடன், இலவச ரோமிங், பயன்படுத்தாத டேட்டாவை ரோல் ஓவர் முறையில் சுமார் 200 ஜிபி டேட்டா வரை பெறும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் சலுகை வழங்கப்படவில்லை. வோடபோன் பிளே செயிலியை அனுகலாம்.
ஏர்டெல் ரூ. 399
நாட்டின் முதன்மையான ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், போஸ்ட்பெய்டு திட்டங்களை செயற்படுத்தி வரும் நிலையில் குறைந்தபட்ச ரூ. 399 திட்டத்தில் மாதந்தோறும் 20 ஜிபி டேட்டா வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு நண்மைகளுடன், இலவச ரோமிங், பயன்படுத்தாத டேட்டாவை ரோல் ஓவர் முறையில் சுமார் 200 ஜிபி டேட்டா வரை பெறும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் ஏர்டெல் டிவி, விங்க் மியூசிக் செயிலியை இலவசமாக அனுகலாம்.
ஐடியா ரூ. 389
ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ. 389 கட்டணத்தில் 30 நாட்களுக்கு ரூ. 389 திட்டத்தில் மாதந்தோறும் 20 ஜிபி டேட்டா வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்பு நண்மைகளுடன், இலவச ரோமிங், பயன்படுத்தாத டேட்டாவை ரோல் ஓவர் முறையில் சுமார் 200 ஜிபி டேட்டா வரை பெறும் வகையில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் ஐடியா மியூசிக், மூவிஸ், கேம்ஸ் செயிலியை இலவசமாக அனுகலாம்.
ஜியோ ரூ. 199
ரூ.199 கட்டணத்தில் ஒரு பில்லிங் சைக்கிள் (30 நாட்கள்) நிரண்யம் செய்யப்பட்டுள்ளது. ரூ. 199 கட்டணத்தில் மாதம் முழுமைக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குவதுடன், தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் உயர் வேக 25ஜிபி டேட்டா வழங்குகின்றது. மேலும் கூடுதல் சலுகையாக ஜியோ டிவி, ஜியோ மியூசிக், ஜியோ மூவிஸ் , மேலும் பல்வேறு ஜியோ செயலிகளை இலவசமாக வழங்குகின்றது
மேலும் அறிக ; ஜியோ ஜீரோ டச் பிளான் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
போஸ்ட்பெய்டு திட்டம் ஓப்பீடு
Operator | Plan | Benefits | |||||
டேட்டா | அழைப்புகள் | எஸ்எம்எஸ் | ISD அழைப்பு | ரோமிங் | ஆப் | ||
Reliance Jio | ரூ. 199 | 25GB | இலவசம் | இலவசம் | Pre-Activated (Starting at 50p/min) |
One-click free activation (Unlimited Credit Limit enhancement) | Jio Apps subscription |
Airtel | ரூ. 399 | 20GB | இலவசம் | இலவசம் | Subscription needed | IR Activation chargeable at Rs.149/ month | Wynk Music |
Vodafone | ரூ. 399 | 20GB | இலவசம் | – | Subscription needed | IR Activation chargeable at Rs.149/ month | Vodafone Play |
Idea | ரூ. 389 | 20GB | இலவசம் | இலவசம் | Subscription needed and security deposit required | IR Activation chargeable at Rs.149/ month and with security deposit of Rs 2000 | Idea app suite |