கூடுதல் சலுகையுடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர்கள் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோவின் கூடுதல் டேட்டா நன்மைகளை வழங்கும் 4ஜி டேட்டா வவுச்சர்களில் இப்போது கூடுதலாக டேட்டா உடன் மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான நிமிடங்களை வழங்க துவங்கியுள்ளது. குறிப்பாக ரூ. 11 டேட்டா வவுச்சரில் 75 நிமிடங்கள் ஜியோ டூ மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு வழங்குகின்றது.

முன்பு இந்த டேட்டா திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மை மட்டும் வழங்கப்பட்ட நிலையில் இப்போது அழைப்புகளுக்கான வேலிடிட்டியும் வழங்கப்படுகின்றது.  ரூ.11, ரூ.21, ரூ.51, மற்றும் ரூ.101 ஆகிய திட்டங்களில் வழங்கப்படும் நன்மைகளை பற்றி தொடர்ந்து காணலாம்.

ரூ. 11 டேட்டா வவுச்சரில் 800 எம்பி டேட்டா மற்றும் 75 நிமிடங்கள் ஜியோ டூ மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு வழங்குகின்றது.

ரூ. 21 டேட்டா வவுச்சரில் 2 ஜிபி டேட்டா மற்றும் 200 நிமிடங்கள் ஜியோ டூ மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு வழங்குகின்றது.

ரூ. 51 டேட்டா வவுச்சரில் 6 ஜிபி டேட்டா மற்றும் 500 நிமிடங்கள் ஜியோ டூ மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு வழங்குகின்றது.

ரூ. 101 டேட்டா வவுச்சரில் 12 ஜிபி டேட்டா மற்றும் 1000 நிமிடங்கள் ஜியோ டூ மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு வழங்குகின்றது.

கூடுதல் சலுகையுடன் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டேட்டா வவுச்சர்கள் அறிமுகம்