4 ஜி வேகத்தில் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் - டிராய்

டிராய் வெளியிட்டுள்ள ஜனவரி மாதம் 4 ஜி இணைய வேகம் தொடர்பான அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து 13வது மாதமாக முதலிடத்தல் உள்ளது. ஆனால் ookla  வெளியிட்ட அறிக்கையில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஜனவரி 2019 மாதந்திர டிராய் வேகம் தொடர்பான அறிக்கையில், அதிகபட்ச இணைய வேகம் 18.8 Mbps ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய டிசம்பர் மாத முடிவில் இணைய வேகம் 18.7 Mbps ஆக இருந்தது இதனை தொடர்ந்து ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், டிசம்பரில் சுமார் 9.8 Mbps வழங்கி வந்த நிலையில், ஜனவரி 2019-ல் 9.5 Mbps வேகமாக அதிகரித்துள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனங்கள் இனைந்து செயல்பட்டு வந்தாலும், வோடபோன் இணைய வேகம் ஜனவரி 2019-ல் 6.7 Mbps ஆக உயர்ந்துள்ளது. முந்தைய டிசம்பர் 2018-ல் 6.3 Mbps ஆக இருந்தது.

இறுதியாக ஐடியா செல்லுலார் நிறுவனம், டிசம்பரில் சுமார் 6.0 Mbps வழங்கி வந்த நிலையில், ஜனவரி 2019-ல் 5.5 Mbps வேகமாக குறைந்துள்ளது.

4 ஜி வேகத்தில் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் - டிராய்

ஐடியா செல்லுலார்

இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அப்லோட் அறிக்கையில் ஐடியா செல்லுலார் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

அதிகபட்சமாக ஐடியா நிறுவனம் , அப்லோட் வேகத்தில் 5.8 Mbps ஆக இருந்துள்ளது. முந்தைய டிசம்பர் 2018-ல் 5.3 Mbps ஆக இருந்தது. இதனை தொடர்ந்து வோடபோன் இந்தியா நிறுவனம்,  அப்லோட் வேகத்தில் 5.4 Mbps ஆக இருந்துள்ளது. முந்தைய டிசம்பர் 2018-ல் 5.1 Mbps ஆக உள்ளது.

இணைய தரவிறக்க வேகத்தில் முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்,  தரவேற்றத்தில் ஜனவரி 2019-ல் 4.4 Mbps  வேகமாக இருந்துள்ளது. ஆனால் முந்தைய டிசம்பர் 2018-ல் 4.3 Mbps வேகமாக இருந்தது.

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம்,  அப்லோட் வேகத்தில் 3.8 Mbps ஆக இருந்துள்ளது. முந்தைய டிசம்பர் 2018-ல் 3.9 Mbps ஆக இருந்திருந்தது.

4 ஜி வேகத்தில் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் - டிராய்