2021 ஆம் ஆண்டின் மத்தியில் ஜியோ 5ஜி சேவை துவக்கம் - அம்பானி

இந்திய மொபைல் காங்கிரஸ் 2020 அரங்கில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி பேசுகையில் 5ஜி சேவையை 2021 ஆம் ஆண்டின் மத்தியில் துவங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தற்சார்பு இந்தியாவின் அங்கமாக சாம்சங் மற்றும் குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி தொலைத் தொடர்பு கருவிகளை தயாரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

2020 இந்திய மொபைல் காங்கிரஸ் அரங்கில் பேசிய முகேஷ் அம்பானி, 300 மில்லியன் இந்தியர்கள் தற்போதும் 2ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அம்பானியின் முக்கிய அம்சமாக காணப்பட்டது. இதை சரிசெய்ய அவசர கொள்கை நடவடிக்கைகள் தேவை, எனவே பின்தங்கிய இந்தியர்களுக்கு மலிவு விலையில் 4ஜி ஸ்மார்ட்போனைப் பெறும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும், இது அவர்களுக்கு நேரடி நன்மை பரிமாற்றத்திற்கும் உதவும் மற்றும் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்க முடியும்.

5ஜி துவக்கத்தில் மலிவு விலையில் வெளியிடுவதற்கான கொள்கை தேவைகள் குறித்து அம்பானி கவனம் செலுத்தி வருவதாகவும், குறிப்பாக 4ஜி சேவையை தொடர்ந்து 5ஜி புரட்சிக்கு ஜியோ முன்னோடியாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் உடன் கூட்டு சேர்ந்துள்ள ஜியோ பிளாட்ஃபாரம், 20க்கு மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் கூட்டணியாக, செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், பெரிய தரவு, இயந்திர கற்றல், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், பிளாக்செயின் போன்றவற்றில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.