தொடர்ந்து இணைய வேகம் வழங்குவதில் ஜியோ முதலிடம் - டிராய்

இந்தியாவில் 4ஜி இணைய வேகம் தொடர்பான தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) பிப்ரவரி மாதத்துக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜியோ நிறுவனம் தொடர்ந்து இணைய வேகம் வழங்குவதில் போட்டியாளர்களை விட சிறந்து விளங்குவதாக தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் 20.9 Mbps டவுன்லோட் வேகத்தில் இணையத்தை வழங்குகின்றது.

அப்லோடு வேகத்தில் ஐடியாவை பின்னுக்கு தள்ளி வோடபோன் நிறுவனம், 6.8 Mbps வேகத்தை அளிக்கின்றது. ஜியோ தரவேற்ற வேகத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

4ஜி இன்டர்நெட் ஸ்பீடு பிப்ரவரி 2019

டிராய் அறிக்கையின் மூலம் தொடர்ந்து மாதந்தோறும் 4ஜி சேவை வழங்கும் நிறுவனங்களில் அதிகபட்சமாக கிடைக்கின்ற டவுன்லோடு ஸ்பீடு மற்றும் அப்லோடு ஸ்பீடு தொடர்பான அறிக்கையில் கடந்த பிப்ரவரி மாத முடிவில் ஜியோ நிறுவனம் டவுன்லோடு வேகத்தில் முதலிட்டத்திலும், அப்லோடு வேகத்தில் வோடபோன் முதலிடத்திலும் உள்ளது.

வோடபோன் மற்றும் ஐடியா கூட்டு நிறுவனங்களாக செயல்பட்டு வரும் நிலையில், தனித்தனியாகவே சோதனை செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து இணைய வேகம் வழங்குவதில் ஜியோ முதலிடம் - டிராய்

4ஜி டவுன்லோட் ஸ்பீடு

ஜியோ நிறுவனம் அதிகபட்ச வேகத்தை வழங்கி முதலிடத்திலும், ஏர்டெல் டெலிகாம் அதிகபட்சாக 9.4 எம்பி வேகத்தை விநாடிக்கு வழங்கி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

ஜியோ – 20.9 Mbps

ஏர்டெல்  – 9.4 Mbps

வோடபோன் – 6.8 Mbps

ஐடியா – 5.7 Mbps

ஏர்டெல் டெலிகாம்

4ஜி அப்லோட் ஸ்பீடு 

இணைய தரவேற்ற வேகத்தில் வோடபோன் நிறுவனம் அதிகபட்சமாக 6 Mbps வேகத்தை வழங்கியுள்ளது. முன்பாக வெளிவந்த மாதங்களின் அறிக்கையில் ஐடியா முதலிடத்தில் இருந்து வந்த நிலையில் , தற்போது இரண்டாவது இடத்தில் உள்ள ஐடியா அப்லோட் ஸ்பீடு 5.6 Mbps ஆக உள்ளது.

வோடபோன் – 6 Mbps

ஐடியா – 5.6 Mbps

ஜியோ – 4.5 Mbps

ஏர்டெல்  – 3.7 Mbps

தொடர்ந்து டெலிகாம் செய்திகள் படிக்க எங்களை பின்தொடருங்கள்..