கூடுதல் டேட்டா பெற ஜியோ பூஸ்டர் பேக் வழங்கும் சலுகைகள் முழுவிபரம்.!

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நிறுவனம், தனது பயனாளர்களுக்கு தேவைக்கு ஏற்ப கூடுதல் டேட்டாவை ஜியோ பூஸ்டர் பேக் என்ற பெயரில் வழங்கி வருகின்றது. இந்த 4ஜி டேட்டா பேக்குகள் பயன்படுத்தி வரும் ரீசார்ஜ் பிளான்களுடன் கூடுதல் டேட்டா நன்மையை உங்களுக்கு வழங்குகின்றது.

தினசரி டேட்டா வரம்பினை கடந்த பிறகு இந்த பேக் பயன்பாட்டிற்கு வரும் , உங்களுடைய தினசரி டேட்டா 1.5 ஜிபி எனில், அதன் அளவை உபயோகித்தப் பிறகு தானாகவே 4ஜி பூஸ்டர் பேக்குகள் மூலம் கூடுதல் டேட்டாவை பெறலாம்.

ஜியோ பூஸ்டர் பேக் பிளான்கள்

ஜியோ நிறுவனம், தனது பயனாளர்களுக்கு ரூ.11, ரூ.21, ரூ.51 மற்றும் ரூ.101 என நான்கு விதமான 4ஜி பூஸ்டர் பேக்குகளை அளிக்கின்றது. இந்த பேக்குகளில் குறிப்பாக ரூ.101 ரீசார்ஜ் திட்டத்தில் மை ஜியோ ஆப்  மூலம் ரீசார்ஜ் செய்யும் பெரும்பாலானவர்களுக்கு ரூ.50 கேஷ்பேக் சலுகையை அளிக்கின்றது.

ரூ.11 மதிப்புள்ள பூஸ்டர் பேக் திட்டத்தில் பயனாளர்கள் தங்களது பயன்பாட்டில் உள்ள டேட்டா பேக் உடன் கூடுதலாக 400 எம்பி டேட்டா பெற்றுக் கொள்ளலாம். இந்த பேக் உங்களுடைய பயன்பாட்டில் உள்ள பிளான் வேலிடிட்டி வரை கிடைக்கப் பெறும்.

அடுத்து ரூ.21 கட்டணத்தில் வழங்கப்பட்டுள்ள திட்டத்தில் பயனாளர்கள் மொத்தமாக 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

ரூ.51 மதிப்புள்ள மூன்றாவது ரீசார்ஜ் திட்டத்தில் பயனாளர்கள் மொத்தமாக 3 ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்.

இறுதியாக ரூ.101 மதிப்புள்ள திட்டத்தில் பயனாளர்களுக்கு 6 ஜிபி உயர்வேக டேட்டா வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் கூடுதல் நன்மையாக மை ஜியோ ஆப்  மூலம் ரீசார்ஜ் செய்யும் பெரும்பாலானவர்களுக்கு ரூ.50 வரை கேஷ்பேக் சலுகையை அளிக்கின்றது.

jio-booster-packs

பொதுவாக ஜியோ பூஸ்டர் பேக் இயங்குவதற்கு அடிப்படையான டேட்டா ரீசார்ஜ் பேக்குகள் மிகவும் அவியமாகும். அதாவது ரூ.98 முதல் கிடைக்கின்ற ஏதாவது ஒரு ரீசார்ஜ் திட்டத்தினை பயன்படுத்தி வருவது கட்டாயமாகும். அவ்வாறு பயன்படுத்தாத நேரத்தில் இந்த பூஸ்டர் பேக்குகள் டேட்டா இருக்கும் பட்சத்திலும் பலனளிக்காது.