ஐபிஎல் 2018 : பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் ஆஃபர்கள் ஒப்பீடு

இந்தியாவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஐபிஎல் 2018 போட்டிகளை முன்னிட்டு டெலிகாம் நிறுவனங்கள் பல்வேறு சிறப்பு டேட்டா சலுகைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் சிறப்பு பேக்குகளை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2018 டெலிகாம் ஆஃபர்கள்

ஐபிஎல் 2018 : பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் ஆஃபர்கள் ஒப்பீடு

ஆன்லைனில் மொபைல் வாயிலாக ஐபிஎல் போட்டிகளை நேரடியாக காண ஹாட்ஸ்டார் வாயிலாக பெற ஜியோ 4ஜி டெலிகாம் வழிவகுத்துள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் ஏர்டெல் டிவி ஆப் வாயிலாக வழிவகை செய்துள்ளது. இந்நிலையில் வோடபோன் நிறுவனத்தின் வோடபோன் பிளே ஆப் எனப்படுகின்ற வீடியோ மற்றும் நேரலை சேனல்களை வழங்கும் செயலி ஜூன் 30ந் தேதி வரை இலவசமாக வழங்கப்பட உள்ளது.

பிஎஸ்என்எல் ஐபிஎல் பேக்

ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு நாட்டின் பொது தொலைத் தொடர்பு நிறுவனம் 51 நாட்கள் செல்லுபடியாகும் வகையிலான ஐபிஎல் பேக்கில் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டாவை 3ஜி மற்றும் 2ஜி வேகத்தில் ரூ.248 கட்டணத்தில் செயற்படுத்தி உள்ள திட்டம் நாடு முழுவதும் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 30, 2018 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2018 : பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் ஆஃபர்கள் ஒப்பீடு

ஜியோ கிரிகெட் சீசன் பேக்

ஜியோ நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு பல்வேறு பரிசுகள் உட்பட, இலவசமாக ஜியோ டிவி ஆப் வாயிலாக போட்டிகளை நேரலையில் காண வழி வகுத்துள்ள நிலையில், கூடுதலாக கிரிக்கெட் சீசன் பேக் என்ற பெயரில் ரூ.251 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் திட்டத்தை 51 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிவித்துள்ளது. ஜியோ தன் தனா தன் லைவ் காமெடி ஷோ போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2018 : பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் ஆஃபர்கள் ஒப்பீடு

ஏர்டெல் டிவி ஆப்

ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் சிறப்பு டேட்டா திட்டங்களை அறிவிக்காத நிலையில், சிறப்பு சலுகையாக ஐபிஎல் போட்டிகளை நேரலையில் இலவசமாக பார்க்கும் வகையில் ஏர்டெல் டிவி செயலில் லைவ் ஆப்ஷனை வழங்கியுள்ளது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் ரூ.499 கட்டணத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கும் 82 நாட்கள் செல்லுபடியாகின்ற பிளானை வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் 2018 : பிஎஸ்என்எல், ஜியோ, ஏர்டெல் ஆஃபர்கள் ஒப்பீடு