இந்தியாவின் முதன்மையான பார்தி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ஜியோ 4ஜி நெட்வொர்கிற்கு சவால் விடுக்கும் வகையிலான திட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் புதிய ரூ.249 பிளான் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ரூ.349 திட்டத்தை 3ஜி/4ஜி பயனாளர்களுக்கு வழங்கியுள்ளது.

ஏர்டெல் ரூ. 249

 

பார்தி ஏர்டெல் தொடர்ந்து ஜியோ நிறுவனத்துக்கு எதிரான திட்டங்களை மிக குறைந்தபட்ச விலை வித்தியாசத்தில் வழங்கி வரும் நிலையில், சமீபத்தில் தனது அதிகார்வப்பூர்வ இணையதளம் மற்றும் ஏர்டெல் செயலில் வழங்கியுள்ள ரூ.249 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டு நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் உள்ளூர் மற்றும் வெளியூர் (ரோமிங் உட்பட) , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றது.

ஏர்டெல்லின் மற்றொரு பிளான் ரூ.349 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி பெற்று  நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் உள்ளூர் மற்றும் வெளியூர் (ரோமிங் உட்பட) , தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றது.

இந்த திட்டங்களை தவிர சமீபத்தில் இந்நிறுவனம், ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு இலவசமாக நேரலையில் ஐபிஎல் போட்டிகளை காண வழி வகுக்கும் வகையில் ஏர்டெல் டிவி செயலில் வசதி வழங்கியிருப்பதுடன், ரூ.499 கட்டணத்தில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்கும் திட்டத்தை 82 நாட்களுக்கு செயற்படுத்தியிருந்தது.