ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு சவாலினை வழங்கும் வகையில் மாதந்தோறும் 10ஜிபி டேட்டா என 6 மாதங்களுக்கு 60ஜிபி இலவச டேட்டாவை ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது.

ஏர்டெல் ஆஃபர்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவன வரவிற்கு பிறகு தொடர்ந்து டேட்டா கட்டணம் குறைந்து வரும் நிலையில் பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா மற்றும் குறைந்த விலை திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

கடந்த சில மாதங்களாக இந்நிறுவனம் போஸ்ட்பெய்டு பயனாளர்களுக்கு 30ஜிபி டேட்டா வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது மற்றொரு புதிய சலுகையாக இந்நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் ஏர்டெல் லைவ் டிவி செயலியை தரவிறக்கினால் மாதந்தோறும் 10ஜிபி டேட்டாவை பெறுவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை அனைத்து வட்டங்களிலும் உள்ள இந்நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு பயனாளர்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த நிறுவனம் தனது ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ.5 முதல் ரூ.399 வரையிலான பல்வேறு திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் முதற்கட்டமாக 4ஜி வோஎல்டிஇ சேவையை மும்பை நகரில் தொடங்கியுள்ளது.