Reliance Jio crosses 300 million customers
Reliance Jio Crosses 300 Million Customers

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பெயரில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் பிளே ஸ்டோரில் 152 செயலிகள் போலியான பெயரை கொண்டு இலவச டேட்டா வழங்குவதாக கூறி ஸ்பேம் விளம்பரங்களை கொண்டு வருமானம் ஈட்டுவதாக சைமென்டெக் என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஜியோ நிறுவனம் இந்தியாவின் தொலைத் தொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் அறிமுக காலத்தில் பல்வேறு இலவச டேட்டா மற்றும் அழைப்புகளை வழங்கி பெரும்பான்மையான பயனாளர்களை பெற்றுள்ளது.

போலியான ஜியோ ஆப்கள் தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களை மிகப்பெரிய அளவில் மோசடி செய்து வருகின்றன. குறிப்பாக தங்கள் உய லாபத்திற்காக விளம்பரங்களைக் காண்பிக்கின்றன. ஜியோ பெயரைப் பயன்படுத்திய இலவசமாக டேட்டா வழங்குவதாகக் கூறும் சுமார் 152 செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த செயலிகள் 21 வெவ்வேறு உருவாக்குநர்கள் பெயரில் உருவாக்கப்பட்டு சந்தேகத்திற்கு இடமின்றி ஜியோ பயனர்களுக்கு 25 ஜிபி முதல் 125 ஜிபி வரை தினசரி டேட்டா வழங்குவதாக விளம்பரப்படுத்தி இன்ஸ்டால் செய்யும் பயன்காளரிடம் போலியான முறையில் விளம்பரங்களை கொண்டு வருவாயை ஈட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி முதல் சுமார் 40,000 பயனர்கள் இந்த செயலிகளை நிறுவியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ஆப்கள் வழக்கமாக ‘ஜியோ 4 ஜி சலுகைகள்’, ‘மை ஜியோ 4 ஜி’, ‘ஜியோ பிரைம்’ போன்ற பெயர்களைக் கொண்டுள்ளன. அவை அதிகாரப்பூர்வ மை ஜியோ லோகோவையும் பயன்படுத்தியுள்ளதால் பொதுவான பயனர்களுக்கு போலி மற்றும் உண்மையான செயலிகளை கண்டறிவதனை கடினமாக்குகிறது.

போலி ஜியோ செயலிகள், இலவச டேட்டா பெற அவர்களின் தொலைபேசி எண்ணை பதிவு செய்யுமாறு கேட்பார்கள், பின்னர் இதனை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் டேட்டா வழங்கப்படும் என குறிப்பிடுவார்கள்.

இறுதிவரை, எந்த டேட்டாவையும் இந்த போலி ஆப்கள் வழங்காது. ஆனல் உங்கள் மொபைலில் விளம்பரங்களை தோன்ற செய்து அவர்களுக்கு தேவையான வருவாயை ஈட்டுகிறார்கள். இதுவரை போலி ஆப்களை கூகுள் தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்காமல் உள்ளது.