இந்தியாவின் முன்னணி 4ஜி வழங்குநராக விளங்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் குறைந்த விலையில் கம்பிவழி உயர்வேக ஜியோ ஜிகா ஃபைபர் சேவை 29 முன்னணி நகரங்களில் முதற்கட்டமாக தொடங்கவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோ நிறுவனம் 4ஜி சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், இந்நிறுவனத்தின் அடுத்த சேவையாக வழங்க திட்டமிடபட்டுள்ள பிராட்பேண்ட் சேவையாக ஜியோ ஜிகா ஃபைபர் FTTH (Fiber-to-the-Home) சேவையில் குறைந்த கட்டணத்தில் 1100 நகரங்களில் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் முதற்கட்டமாக சென்னை உட்பட 29 நகரங்களில் வழங்க உள்ளது.

முதற்கட்டமாக ஜியோ கம்பிவழி இணைய சேவை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, லக்னோ, தானே, கான்பூர், புனே, ஆக்ரா, போபால், நாசிக், மீரட், குவஹாத்தி, லூதியானா, ஃபரிதாபாத், ஸ்ரீநகர், அமிர்தசரஸ், சண்டிகர், அலகாபாத், ராஜ்கோட், ராஞ்சி, பெங்களூரு, நாக்பூர், ராய்பூர், சோலாப்பூர், ஜோத்பூர், பாட்னா மற்றும் கோட்டா ஆகிய நகரங்களில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உறுதியான அறிமுக தேதி விபரம் கிடைக்கப் பெறவில்லை.