ஜியோ நிறுவனம் தொடர்ந்து சிறப்பு டேட்டா சலுகைகளை குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்து வரும் ஜியோ ஹைப்பி நியூ இயர் 2018 பிளான்களை அறிமுகம் செய்துள்ளது.

ஜியோ ஹேப்பி நியூ இயர் 2018

ஜியோ 4ஜி நிறுவனம் இரண்டு புதிய பிளான்களை புத்தாண்டை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. முந்தைய பிளான்கள் தொடர்ந்து பயன்பாட்டில் கிடைக்க உள்ள நிலையில், புதிய திட்டங்கள் இன்றிரவு 12 மணி முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

ஜியோ 199

ஜியோ 199 டேட்டா பிளானில் தினமும் 1.2 ஜிபி டேட்டா பயன்பாடு மற்றும் வரம்பற்ற அழைப்புகள் , ஜியோ ஆப்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக கிடைக்க தொடங்கியுள்ளது. மேலும் தினசரி உயர் வேக டேட்டா பயன்பாடுக்கு பிறகு 128 Kbps வேகத்தில் இணையத்தை அனுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜியோ 299

ஜியோ 299 டேட்டா பிளானில் தினமும் 2 ஜிபி டேட்டா பயன்பாடு மற்றும் வரம்பற்ற அழைப்புகள் , ஜியோ ஆப்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை மொத்தம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாக கிடைக்க தொடங்கியுள்ளது. மேலும் தினசரி உயர் வேக டேட்டா பயன்பாடுக்கு பிறகு 128 Kbps வேகத்தில் இணையத்தை அனுகலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனம் ஜியோ 199 மற்றும் ஜியோ 299 ஆகிய பிளான்களுடன் ரூ.399 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா 70 நாட்கள் வேலிடிட்யுடன் வழங்கப்பட உள்ளது.  ரூ.459 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்யுடன் வழங்கப்பட உள்ளது. ரூ.499 திட்டத்தில் தினமும் 1 ஜிபி டேட்டா 91 நாட்கள் வேலிடிட்யுடன் வழங்கப்பட உள்ளது.

ரூ.509 திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா 49 நாட்கள் வேலிடிட்யுடன் வழங்கப்பட உள்ளது. மேலே வழங்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களிலும் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஜியோ ஆப்ஸ் பயன்பாட்டை பெறலாம்.

Jio Happy New Year Plan Details