ரூ. 299 க்கு ஜியோ வழங்கும் அதிரடி டேட்டா சலுகை விபரம்

ரூ.399 விலையில் ஜியோ (Reliance Jio) வழங்குகின்ற 84 நாட்களுக்கு செல்லுபடியாகின்ற பிளானில், ஹாலிடே ஹங்கமா (Holiday Hungama) என்ற பெயரில் ரூ. 100 உடனடி கேஷ்பேக் சலுகையாக வழங்கப்பட்டு ரூ. 299 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கப்பட உள்ளது.

ஜியோ கேஷ்பேக் சலுகை விபரம்

இந்தியாவின் முன்னணி 4ஜி நெட்வொர்க நிறுவனமாக விளங்கும் ஜியோ இன்ஃபோகாம் தொடர்ந்து மிக சலுகை விலையில் டேட்டா மற்றும் அளவில்லா அழைப்புகளை வழங்கி வரும் நிலையில், தற்போது இந்நிறுவனத்தின் ரூ. 399 மதிப்பிலான திட்டத்துக்கு ரூ. 100 உடனடி கேஷ்பேக் வழங்குவதுடன் 84 நாட்களுக்கு பெற ரூ. 299 மட்டும் ரீசார்ஜ் செய்தால் போதுமானதாக அமைகின்றது.

ரூ. 299 க்கு ஜியோ வழங்கும் அதிரடி டேட்டா சலுகை விபரம்

எவ்வாறு 100 கேஷ்பேக் பெறுவது ?

பொதுவாக ஜியோ நிறுவனம் முன்பு அறிவித்திருந்த சிறப்பு சலுகையின் படி மை ஜியோ ஆப் (My Jio app) வாயிலாக ரூ. 399 க்கு மேலான திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு ரூ. 50 உடனடி கேஷ்பேக் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கூடுதலாக ரூ. 50 கேஷ்பேக் சலுகையை டிஜிட்டல் சார்ந்த பேமென்ட் நிறுவனமாக விளங்கும் PhonePe வாயிலாக வழங்குகின்றது.

அதாவது மை ஜியோ ஆப் வாயிலாக உள்நுழைந்து ரீசார்ஜ் செய்யும்போது முதற்கட்ட ரூ. 50 கேஷ்பேக் உடனடியாகவும், பேமென்ட் சார்ந்த பகுதியில் உள்ள PhonePe அம்சதை தேர்ந்தெடுக்கும் வகையில் ரூ. 50 உடனடி கேஷ்பேக் பெற வழி வகுப்பதனால் இந்த திட்டத்துக்கு ரூ. 299 மட்டும் செலுத்தினால் போதுமானதாகும்.

ரூ. 299 க்கு ஜியோ வழங்கும் அதிரடி டேட்டா சலுகை விபரம்

ரூ. 399 திட்டத்தில் அளவில்லா உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்கள் மற்றும் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 84 நாட்களுக்கு இந்த பிளான் செல்லுபடியாகும்.