தமிழ்ராக்கர்ஸ் தளத்தை முடக்கும் ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் முன்னணி 4ஜி வழங்குநராக விளங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பார்ன் தளங்களை தொடர்ந்து விபிஎன் மற்றும் பிராக்ஸி வலைதளங்களை முடக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழ்ராக்கர்ஸ் வலைதளம் தற்போது அனுகுவது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்ராக்கர்ஸ்

இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை அனுப்பியுள்ள முந்தைய அறிக்கையில் ஆபாச வலைதளங்கள் முற்றிலும் முடக்க உத்தரவிட்டிருந்த நிலையில், பெரும்பாலான பார்ன் வலைதளங்கள் முற்றிலும் முடங்கியதால், மாற்றுப்பெயரில் இணையதளங்கள் தொடங்கப்பட்டது.

தமிழ்ராக்கர்ஸ் தளத்தை முடக்கும் ரிலையன்ஸ் ஜியோ

ஆன்லைன் வாயிலாக புதிய படங்களை வெளியிட்டு வரும் பிரசத்தி பெற்ற தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தின் டொமைன் எக்ஸ்டன்ஸ்கள் தொடர்ந்து தொலைத்தொடர்பு துறை மூலப் முடக்கப்பட்டு வந்தாலும், புதிய எக்ஸ்டன்ஸை பெற்று வந்தது. மேலும் இதனை அனுக இயலாதவர்கள் விபிஎன் மற்றும் பிராக்ஸி வலைதளங்கள் மூலம் அனுக தொடங்கினர்.

ஆனால் இந்த முறைக்கு புதிய சிக்கலை ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வொர்க் ஏற்படுத்தியுள்ளது. பாரன் வலைதளங்களை தொடர்ந்து பிராக்ஸி தளங்களை ஜியோ 4ஜி நெட்வொர்க் முடக்கியுள்ளது.

முன்னணி பிராக்ஸி தளங்களான trproxy, hide.me, vpnbook.com, மற்றும் whoer.net போன்ற வலைதளங்கள் அனுக இயலாமல் ஜியோ நெட்வொர்க் துண்டித்துள்ளது. ஆனால் வோடபோன், ஐடியா, ஏக்ட் பிராட்பேண்ட், ஏர்டெல், பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் பிராக்ஸி தளங்களை முடக்கவில்லை.

தொலைத்தொடர்பு துறை பிராக்ஸி தளங்களை முடக்க எவ்விதமான அறிவிப்பை வெளியிடாத நிலையில் ரிலையன்ஸ் ஜியோ முடக்கியுள்ளதால், இணைய சுதந்திரத்தை ஜியோ முடக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழ்ராக்கர்ஸ் தளத்தை முடக்கும் ரிலையன்ஸ் ஜியோ

ஜியோ நிறுவனம் எவ்விதமான நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பது அடுத்த சில நாட்களில் தெரியவரும். விபிஎன் மற்றும் தளங்களை முடக்கப்படுவதனால் தமிழ்ராக்கர்ஸ் வலைதளம் அனுகுவதில் பலரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். விபிஎன் சேவையை இந்தியாவில் சுதந்திரமாக பயன்படுத்த இந்திய சட்டம் அனுமதிக்கின்றது.

மிக இலகுவாக தமிழ்ராக்கர்ஸ் தளத்தை அனுக translate.google.com தளம் போதுமானதாகும். இதில் url டிரான்ஸ்லேட் வாயிலாக இந்த தளத்தை அனுகலாம்.