jio

ரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு சிறப்பு கிரிக்கெட் தன் தனா தன் உடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி திட்டங்களை அறிவித்துள்ளது. ரூ.499 மற்றும் ரூ.777 என இரு பிளான்களிலும் வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகள் குறித்து இங்கே அறிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சேவைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வழங்கி வரும் ரூ.399 திட்டத்துடன் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ரூ.401 திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகையுடன் கூடுதலாக 6ஜிபி டேட்டா என மொத்தமாக 90 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ வாய்ஸ் கால், மற்ற நெட்வொர்க்கிற்கு 1000 நிமிடங்கள் வழங்கப்பட்டு, 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றது.

அடுத்தப்படியாக, கிரிக்கெட் தன் தனா தன் என அறிவிக்கப்பட்டுள்ள ரூ.499 சிறப்பு ரீசார்ஜில் கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா என 56 நாட்களுக்கு பெறலாம். இந்த திட்டத்தில் வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படவில்லை.

ரூ.777 மதிப்பில் அறிவிக்கப்பட்டுள்ள ரீசார்ஜ் திட்டத்தில் கிரிக்கெட் உட்பட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன், தினசரி 100 எஸ்எம்எஸ், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா சலுகையுடன் கூடுதலாக 5 ஜிபி டேட்டா என மொத்தமாக 131 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ வாய்ஸ் கால், மற்ற டெலிகாம் அழைப்பு 3000 நிமிடங்கள் வழங்கப்பட்டு, 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகின்றது.

அடுத்ததாக ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகின்ற ரூ.2,599 பிளானில், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையுடன் கூடுதலாக 10 ஜிபி டேட்டா என மொத்தமாக 740 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ வாய்ஸ் கால், மற்ற டெலிகாம் அழைப்பு 12000 நிமிடங்கள், தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விஐபி டேட்டா ஆட் ஆன் பேக்குகள்

இதுதவிர கூடுதலாக டேட்டா ஆட் ஆன் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளவை பின்வருமாறு;- ரூ.612, ரூ.1004, ரூ.1206, மற்றும் ரூ.1208 ஆகும்.