இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆனையம் (டிராய்) வெளியிட்டு இணைய வேகம் தொடர்பான அறிக்கையில் , கடந்த டிசம்பர் 2018 மாதந்திர 4ஜி இணைய வேகத்தில் ஜியோ தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
4ஜி இணைய வேகம்
இந்திய சந்தையில் முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வருகைக்குப் பின்னர், முற்றிலும் மாறிய தொலைத் தொடர்பு சந்தையில் இணைய வேகம் உட்பட பல்வேறு சேவைகள் வழங்குவதில் ஜியோ போட்டியாளர்களை விட கூடுதலான வசதிகள் வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது.
டிராய் அமைப்பின் மை ஸ்பீடு பிரிவு வாயிலாக, சேகரிக்கப்பட்டுள்ள விபரத்தின் படி டவுன்லோட் ஸ்பீடில் டிசம்பர் மாத முடிவில் ஜியோ 4ஜி வேகத்தில் 18.7 Mbps ஆக உள்ளது. ஆனால் தொடர்ந்து மூன்றாவது மாதமாக இணைய வேகத்தில் ஜியோ சரிவை கண்டுள்ளது. குறிப்பாக நவம்பர் மாதம் 20.3 Mbps ஆக இருந்தது. ஜியோ 4ஜி நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் டிசம்பரில் 9.8 Mbps (நவம்பரில் 9.7 Mbps) வேக இணையத்தை வழங்கியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக விளங்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் வேக அறிக்கையில், வோடபோன் இந்தியா நிறுவனம் சராசரியாக நவம்பரில் 6.3 Mbps (டிசம்பரில் 6.8 Mbps) ஆக குறைந்துள்ளது. ஐடியா செல்லுலார் நிறுவனத்தை பொறுத்தவரை டிசம்பர் மாத முடிவில் 6.0 Mbps (டிசம்பபரில் 6.2 Mbps வேகம்) ஆக குறைந்துள்ளது.
அப்லோடு ஸ்பீடு
இணைய தரவேற்ற வேகத்தில் வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனத்தில் செயல்பட்டு வரும் ஐடியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. ஐடியா நிறுவனம் டிசம்பர் மாத முடிவில் அதிகபட்சமாக 5.3 Mbps வேகத்தை பதிவு செய்துள்ளது. வோடபோன் இந்தியா 4ஜி அப்லோடு ஸ்பீடில் 5.1 Mbps வேகத்துடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளது. அம்பானியின் ஜியோ டெலிகாம் நிறுவனம் 4.3 Mbps வேகத்துடன் 3வது இடத்திற்கு சரிந்துள்ளது. இறுதியாக ஏர்டெல் நிறுவனம் நவம்பரில் 3.9 Mbps வேகத்தை பெற்றுள்ளது.
கடந்த 12 மாதங்களில் ஜியோ 4ஜி டெலிகாம் நிறுவனம், தொடர்ந்து முதலிடத்தை டிராய் மை ஸ்பீடு வாயிலாக தெரிய வந்துள்ளது.