வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் செயற்படுத்தப்பட உள்ள புதிய ஆல் இன் ஒன் பிளான் கட்டண விபரத்தை ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ளது. ரூ. 199 முதல் அதிகபட்சமாக ரூ.2199 வரையிலான திட்டங்களை அறிவித்துள்ளது.
ஜியோவின் பிளான்கள் 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் என வழங்கப்படுள்ளது. தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்குகின்ற பிளான்களில் ரூ.199 பிளான் 28 நாட்களுக்கும், ரூ.399 பிளான் 56 நாட்களுக்கும், ரூ. 555 பிளான் 84 நாட்களுக்கும் வழங்கப்படுகின்றது.
ஜியோ 1.5 ஜிபி டேட்டா பிளான்
ரூ.199 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடம், தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ.399 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 2000 நிமிடம், தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 56 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ.555 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 3000 நிமிடம், தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ.2199 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 12,000 நிமிடம், தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 365 நாட்கள் செல்லுபடியாகும்.
2 ஜிபி டேட்டா பிளான்
தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வகையிலான மூன்று பிளான்களை ஜியோ வழங்குகின்றது. அவை ரூ.299, ரூ.444 மற்றும் ரூ.599 போன்றவை ஆகும். இவற்றில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள் கிடைக்கின்றது.
ரூ.299 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடம், தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ.444 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 2000 நிமிடம், தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 56 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ.599 பிளானில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 3000 நிமிடம், தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுவதுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும்.
3 ஜிபி டேட்டா பிளான்
நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் வகையிலான ரூ.349 திட்டத்தில் வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடம் வழங்கப்படுவதுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
மற்ற ஜியோ பிளான்கள்
ரூ. 129 பிளானில் மொத்தமாக 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 1000 நிமிடம்வழங்கப்படுவதுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ. 329 பிளானில் மொத்தமாக 6 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 3000 நிமிடம்வழங்கப்படுவதுடன் 84 நாட்கள் செல்லுபடியாகும்.
ரூ. 1299 பிளானில் மொத்தமாக 24 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குளுக்கு 12,000 நிமிடம்வழங்கப்படுவதுடன் 28 நாட்கள் செல்லுபடியாகும்.
மற்ற நெட்வொர்க் அழைப்புகள் FUP கடந்த பிறகு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஏறக்குறைய வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவன பிளான்கள் ஒரே மாதிரியாக அமைந்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 40 % வரை கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஆனால் 300 % வரை கூடுதல் பலனை வழங்குகின்றது.